இலங்கை அரசு-புலிகள் திடீர் சந்திப்பு
கொழும்பு:
இலங்கை அரசின் பிரதிநிதிகளும் விடுதலைப் புலிகளும் திடீரென நேற்று நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது முதல் தாய்லாந்து பேச்சு வார்த்தைக்கான ஏற்பாடு வரை அனைத்தும் நார்வேநாடு மூலமாகவே நடந்து வந்தது.
ஆனால், கடந்த சில வாரங்களாக இலங்கை அரசின் மீது புலிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். தாய்லாந்துபேச்சுவார்த்தையில் இலங்கை அரசு ஆர்வம் காட்டவில்லை என்றும், கடற்படையும் ராணுவமும் போர் நிறுத்தத்தில்கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி வருவதாகவும் குற்றம் சாட்டினர்.
தங்கள் மீதான தடைகளை விலக்கவும் இலங்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியிருந்தனர். இதனால்,ஜூன் 3வதசு வாரத்தில் நடப்பதாக உள்ள தாய்லாந்து பேச்சுவார்த்கைள் தாமதமாகும் என்ற கருத்து பரவியுள்ளது.
இந் நிலையில் புலிகளின் நம்பிக்கையை மீண்டும் பெறும் வகையில் தனது பிரதிநிதிகளை நேரடியாக புலிகளின்பகுதிக்கே அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அரசுச் செயலகத்தின் தலைவர் பெர்னார்ட் குணதிலகே நேற்று திடீரென சிறப்புவிமானத்தில் கிளிநொச்சிக்கு வந்தார். அவருடன் இன்னொரு மூத்த அதிகாரியும் நார்வே தூதரும் வந்தனர்.
மூவரும் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனைச் சந்தித்துப் பேசினர். சுமார் 2 மணிநேரம் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதையடுத்து மூவரும் உடனே கொழும்பு திரும்பினர்.
பிரதமர் குறித்து ரணில் விக்கிரமசிங்கேயைச் சந்தித்து பேச்சுவார்த்தை விவரங்களைக் கூறிவிட்டுத் திரும்பியகுணதிலகே நிருபர்களிடம் கூறுகையில், பேச்சுவார்த்தைகள் மிக நட்பான சூழநிலையில் நடந்தன. போர் நிறுத்தஒப்பந்தம் குறித்து முழு விவரமும் விவாதிக்கப்பட்டது என்றார்.
1995ம் ஆண்டுக்குப் பின் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடந்துள்ள நேரடி முதல் பேச்சுவார்த்தைஇது தான்.
நார்வே வெளியுறவுத்துறை துணை அமைச்சர் விடார் ஹெல்ஜெசன் இன்று புலிகளின் ஆலோசகர் ஆண்டன்பாலசிங்கத்தை லண்டனில் சந்தித்துப் பேசுகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications