மதிமுகவுக்கு ஓட்டு போடுங்க : வைகோ

Subscribe to Oneindia Tamil

ஆம்பூர்:

மத்தியில் குரல் கொடுக்க மதிமுகவுக்கு எம்.பிக்கள் இருக்கின்றனர். மாநிலத்தில் குரல் கொடுக்க லட்சுமிகாந்தனுக்கு ஓட்டுபோடுங்கள் வாணியம்பாடி தொகுதியில் அக் கட்சியின் தலைவர் வைகோ பிரச்சாரம் செய்தார்.

வாணியம்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்றுவரை 3 தினங்கள் பிரச்சாரம் செய்தார். திமுக தலைவர்கருணாநிதி இன்றோடு இரண்டாவது நாளாக பிரச்சாரத்தில் உள்ளார்.

இந் நிலையில் வைகோவும் அங்கு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். தனது கட்சியின் வேட்பாளர் லட்சுமிகாந்தனுக்கு ஆதரவாகஅவர் ஓட்டு வேட்யாைடி வருகிறார். ஆம்பூரில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து அவர்பேசியதாவது:

அதிமுக அமைச்சர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி வருகின்றனர். 100 கார்களில் பிரச்சாரம் செய்ய ஊர்வலமாக வருகின்றனர்.பத்திரிக்கைகளில் முழுபக்க விளம்பரம் கொடுக்கின்றனர்.

நீதி காத்த கற்புக்கரசி கண்ணகி சிலையை ஆங்கிலேயக் கொடுங்கோலன் நீல் சிலையின் காலடியில் போட்டுள்ளனர் அதிமுகவினர்.

நாகூர் ஹனீபாவை தேர்தலில் நிற்க வைத்து அமைச்சராக்கும் சூழ்நிலைகள் இருந்த போதெல்லாம் அவரைக் கண்டுகொள்ளாமல்இருந்துவிட்ட கருணாநிதி இப்போது அவரை நிற்க வைத்துள்ளார்.

நாங்கள் இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்று பிரிவினை பார்ப்பவர்கள் இல்லை. அதனால்தான் முஸ்லீம் சகோதரர்கள் நிறைந்தஇந்தத் தொகுதியில் லட்சுமிகாந்தனை நிறுத்தியுள்ளோம்.

எம்.ஜி.ஆரின் மனிதாபிமானம் இப்போது அதிமுகவில் இல்லை; அண்ணாவின் கொள்கை இப்போது திமுகவில் இல்லை.

மத்தியில் குரல் கொடுக்க மதிமுகவுக்கு எம்.பிக்கள் இருக்கின்றனர், சட்டசபையில் சென்று குரல் கொடுக்க லட்சுமிகாந்தனுக்குவாக்களியுங்கள் என்றார் வைகோ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+