எல்லையில் 7 லட்சம் இந்திய ராணுவத்தினர் குவிப்பு
ஜம்மூ:
காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் 7 லட்சத்துக்கும் அதிகமான இந்திய ராணுவத்தினர்குவிக்கப்பட்டுள்ளனர்.
எல்லைக்கு அப்பாலிலிருந்து பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 7வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதில் 19 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஆரம்பித்து தற்போது மோர்ட்டார் ரக பீரங்கிகள் மூலம் பயங்கரமான தாக்குதலை அவர்கள்நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த மோர்ட்டார் ரக குண்டு வீச்சில் இதுவரை 23 கிராமங்களில் உள்ளநூற்றுக்கணக்கான வீடுகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன. அங்கிருந்த 43,796 பேர் பாதுகாப்பானஇடத்திற்குச் சென்று தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதையடுத்து ஜம்மூ-பூஞ்ச் பகுதியில் இந்தியப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதலைமேலும் தீவிரப்படுத்துவதற்காக அப்பகுதிகளில் 7 லட்சத்துக்கும் அதிகமான இந்தியப் படையினர்குவிக்கப்பட்டுள்ளனர்.
எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கலாம் என்ற சூழ்நிலையில் தற்போது இந்தஅளவிற்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏராளமான புதிய பதுங்கு குழிகளும் பாகிஸ்தான் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் மணல் தடுப்புகளும் வெகுவேகமாக அமைக்கப்பட்டு வருகின்றன. எல்லை நெடுகிலும் ஆங்காங்கே கண்காணிப்புக் கோபுரங்களும்அமைக்கப்பட்டு வருகின்றன.
எல்லையில் 24 மணி நேரமும் இந்திய ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போருக்கான உத்தரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம். நடக்கவிருக்கும் அந்தப் போரில்வெற்றியும் பெறுவோம் என்று ஒரு ராணுவ வீரர் நிருபர்களிடம் கூறினார்.
இந்தியாவை நோக்கித் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் படையினர் மக்கள் வாழும் பகுதிகளைநோக்கித் தான் கண்மூடித்தனமாகச் சுடுகின்றனர். ஆனால் நாங்கள் நடத்தும் பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான்பொதுமக்கள் யாரும் பாதிப்படைவதில்லை என்று வேறு சில வீரர்கள் தெரிவித்தனர்.
ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
இதற்கிடையே பூஞ்ச் பகுதியில் எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற மூன்றுலஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
பாகிஸ்தான் படையினர் நடத்திக் கொண்டிருக்கும் பயங்கரமான ஷெல் தாக்குதல்களைப் பயன்படுத்திக் கொண்டுஇந்தத் தீவிரவாதிகள் இன்று அதிகாலை 2.45 மணிக்கு தோபி-சாப்ஸியான் பகுதியில் ஊடுருவ முயன்றனர்.
எல்லையைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் வரும் போது அந்தத் தீவிரவாதிகளும் கண்மூடித் தனமாகத்துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டே வந்தனர்.
ஆனால் இந்திய ராணுவத்தினர் பதிலடித் தாக்குதல் நடத்தியதில் மூன்று தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications