சைதையில் இன்று பிரச்சாரம் தொடங்குகிறார் ஜெ.
சென்னை:
அதிமுக வேட்பாளரும் பிரபல நடிகருமான ராதாரவிக்கு ஆதரவாக தமிழக முதல்வரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று முதல் 3 நாட்களாகப் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
வரும் 31ம் தேதி இடைத் தேர்தல் நடக்கவுள்ள வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை ஆகியமூன்று தொகுதிகளிலுமே அதிமுக தன் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.
இதையடுத்து கடந்த 18ம் தேதி முதல் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் ஜெயலலிதா. முதலில்வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளரான வடிவேலுவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அவர், பின்னர்அச்சிறுப்பாக்கத்தில் பூவராகமூர்த்திக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.
இறுதிக் கட்டமாக இன்று முதல் ராதாரவியை ஆதரித்து சைதாப்பேட்டை தொகுதியில் ஜெயலலிதா தீவிரப்பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இன்று இரவு சைதாப்பேட்டையில் தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கும் ஜெயலலிதா, அடுத்த மூன்றுநாட்களுக்கும் அந்தத் தொகுதி முழுவதும் தெருத் தெருவாகப் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.












Click it and Unblock the Notifications