நான் பெளலர் மாதிரி: நிச்சயம் விக்கெட்டை வீழ்த்துவேன்- கருணாநிதி
அச்சிறுப்பாக்கம்:
நானும் ராமதாசும் கிரிக்கெட் விளையாட்டில் உள்ள பெளலர்கள் மாதிரி, ஜெயலலிதாவின் அடக்குமுறை என்றவிக்கெட்டை வீழ்த்தியே காட்டுவோம் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
அச்சிறுப்பாக்கத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் பார்வேந்ததனுக்கு ஆதரவாககருணாநிதி மாமல்லபுரத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது கடும் மழை பெய்தது. பிரச்சாரத்துக்குக் கொண்டுவரப்பட்ட வேன் கூரை ஓட்டையாக இருந்ததால் மழை நீர் கருணாநிதியின் மீது கொட்டியது.
நன்றாக நனைந்துவிட்ட நிலையிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் வேறு பிரச்சார வேன் கொண்டுவரப்பட்டு அதில் ஏறி தனது பிரச்சாரத்தைத் தொடர்ந்தார் கருணாநிதி.
தொகுதியின் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு இரவில் அச்சிறுப்பாக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டபிரம்மாண்டமான பொதுக் கூடட்டத்தில் அவர் பேசினார். அப்போது கருணாநிதி கூறியதாவது:
இந்த ஆட்சியைப் போலவே எனக்கு பிரச்சாரத்துக்குத் தரப்பட்ட வேனும் ஓட்டையாக இருந்தது.
திமுகவுக்கும் பா.ம.கவுக்கும் முரண்பாடு ஏதும் கிடையாது. நானும் ராமதாசும் ஒரே கொள்ளை உடையவர்கள்தான். நாங்கள் பெளலர்கள் மாதிரி. இந்த ஆட்சியின் அராஜகம் என்னும் விக்கெட்டை வீழ்த்துவதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்.
ஆட்சியை மாற்ற வேண்டும் என்று கூறவில்லை. ஜெயலலிதாவின் ஆணவத்தையும் அராஜகத்தையும் ஒழிக்கவேண்டும். அதற்கு அதிமுகவை இடைத் தேர்தலில் மக்கள் தோற்கச் செய்ய வேண்டும்.
உங்களுக்கு பாதுகாப்பு தர முடியாத, உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் இந்த அரசுக்கு சரியானபாடம் புகட்டுங்கள்.
நான் இன்று மட்டும் 35 இடங்களில் பேசிவிட்டு தொண்ட கட்டிய நிலையில் உங்கள் முன் வந்திருக்கிறேன். இங்குவரும்போதே சோத்துப்பாக்கத்தில் ரயில்வே கேட்டை மூடிவிட்டார்கள். சுமார் அரை மணி நேரம் நான் அங்குகாக்க வைக்கப்பட்டேன்.
ஜெயலலிதாவுக்கு முன்னாள் நான் அச்சிறுப்பாக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக அதிமுகவினர் செய்தஅராஜகம் இது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications