அரசு-புலிகளுக்கு ஆலோசனை தர சட்ட நிபுணர்கள் குழு
கொழும்பு:
தாய்லாந்தில் பேச்சு நடத்தப் போகும் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆலோசனை வழங்கசர்வதேச சட்ட நிபுணர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படவுள்ளது.
சமரச முயற்சிகளை முன்னின்று நடத்தி வரும் நார்வே நாடு அமைக்கும் இந்தக் குழுவில் இந்தியா உள்படபல்வேறு நாடுகளின் சட்ட நிபுணர்களும் இடம் பெறுவர்.
இலங்கையின் வட-கிழக்குப் பகுதியில் புலிகள் தலைமையில் சுயாட்சி பெற்ற ஒரு அரசை அமைப்பது குறித்துத்தான் தாய்லாந்துப் பேச்சுவார்த்தையில் முக்கியமாகப் பேசப்படவுள்ளது.
பேச்சுவார்த்தை நடக்கும்போது இந்த சட்ட நிபுணர் குழுவும் தாய்லாந்தில் இருக்கும். இக் குழு இலங்கை அரசுக்கும்விடுதலைப் புலிகளுக்கும் தேவைப்படும் ஆலோசனைகளைத் தரும். இடைக்கால அரசின் அமைப்பு, அதிகாரம்,இலங்கை அரசுக்கும் இடைக்கால அரசுக்கும் இடையிலான அரசியல் சட்ட உறவு ஆகியவை குறித்து முடிவு செய்யஇந்தக் குழு உதவும்.
இந்த சட்ட நிபுணர் குழுவில் இடம் பெற சுவிட்சர்லாந்து நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி, கனடாவின் இருஅரசியல் சட்ட நிபுணர்கள் ஏற்கனவே முன்வந்து விட்டனர். அதே போல இந்தியாவைச் சேர்ந்த 3 அரசியல் சட்டநிபுணர்களும் இக் குழுவில் இடம் பெறுவரவுள்ளனர்.
தாய்லாந்துக்கு பேச்சுவார்த்தைக்கு வரும் அரசும், புலிகளும் தங்களுடன் தனியே சட்ட நிபுணர்களை அழைத்து வரஉள்ளனர். இவர்கள் தவிர பொதுவாக இருவருக்குமே ஆலோசனை வழங்க இந்தக் குழுவும் தாய்லாந்து வரும்.
அமெரிக்கா- இலங்கை ராணுவ உறவு:
இந் நிலையில் அமெரிக்காவுடன் ராணுவரீதியில் ஒப்பந்தம் செய்து கொள்ள இலங்கை திட்டமிட்டு வருவதாகக்கூறப்படுகிறது.
இலங்கையின் விமானத் தளங்கள், துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தஒப்பந்தம் செய்யப்படும். ஜூலை மாதத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
இந்தப் பகுதிக்கு வரும் அமெரிக்கப் படைகளுக்கு தேவைப்பட்டால் ஆயுதம் கூட இலங்கை வழங்கும்.
அதே போல இலங்கை ராணுவத்தினருக்கு அமெரிக்கா போர் பயிற்சியும் அளிக்கும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications