"சென்னையில் பாக். குண்டு வீசினால் 3.64 லட்சம் பேர் பலியாவர்"
சென்னை:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் சென்னையில் சுமார் 3.64 லட்சம்பேர் பலியாவார்கள் என்று அணு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூஜெர்ஸி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்த ஒரு ஆய்வைமேற்கொண்டனர்.
இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்களில்அணுகுண்டுகள் வீசப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அதன்படி தற்போது அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் பாகிஸ்தானில் உள்ள ஐந்து நகரங்களும் இந்தியாவில் உள்ளஐந்து நகரங்களும் அணுகுண்டுக்கு இலக்காகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
இதனால் பாகிஸ்தானில் 12 லட்சம் பேரும் இந்தியாவில் 17 லட்சம் பேரும் பலியாக வாய்ப்புள்ளதாகவும்பாகிஸ்தானை விட நம் நாட்டில் அதிக மக்கள் தொகை என்பதால் இங்கு தான் அதிக உயிர்ப் பலிகள் ஏற்படும்என்றும் அந்த ஆராய்ச்சி கூறுகிறது.
இந்தியாவின் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய ஐந்து நகரங்களைத் தான்பாகிஸ்தான் குறி வைக்கும் என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் நகர்களில் சுமார் 600 மீட்டர் உயரத்தில் தான் அணுகுண்டுகள் வெடிக்கப்பட்டன. அது போல் வெடித்தால்ஒவ்வொரு இடத்திலும் சுமார் 100 கி.மீ. சுற்றளவிற்கு கதிர்வீச்சு ஏற்படுமாம்.
சென்னையில் பாகிஸ்தான் ஒரு அணுகுண்டை வீசினால் அடுத்த நிமிடமே 3.64 லட்சம் மக்கள் பலியாகிவிடுவார்களாம்.
இதேபோல் பெங்களூரில் 3.15 லட்சம் பேரும், மும்பையில் 4.78 லட்சம் பேரும், கொல்கத்தாவில் 3.57 லட்சம்பேரும் மற்றும் டெல்லியில் 1.77 லட்சம் பேரும் பலியாகி விடுவார்கள் என்று ஆய்வுக் கணிப்புகள் தெரித்துள்ளன.
மேலும் இந்தக் குண்டு வீச்சைத் தொடர்ந்து அந்த நகர்களைச் சுற்றிலும் சுமார் 100 கி.மீ. தூரத்திற்கு கதிர் வீச்சின்தாக்குதல் இருக்கும். இதனால் புற்று நோய் உள்ளிட்ட நோய்களால் மக்கள் சித்திரவதைக்குள்ளாகியேஉயிரிழப்பார்கள் என்றும் அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications