ராஜிவ் கொலை வழக்கில் விடுதலையானவரின் மகள் மர்ம மரணம்: தற்கொலையா?
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலைசெய்யப்பட்ட புகைப்பட நிபுணர் சுபா சுந்தரத்தின் மகள் மர்மமான முறையில் தீயில் கருகி உயிரிழந்ததுசென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுபா சுந்தரத்தின் வீடு சென்னை திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கம் பகுதியில் பத்திரிக்கையாளர்காலனியில் உள்ளது.
சுபா சுந்தரம் தனது குடும்பத்தினருடன் கடந்த வெள்ளிக்கிழமையே மதுரை புறப்பட்டுச் சென்று விட்டார். அவரதுமகள், மகன் மற்றும் அம்மா ஆகியோர் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் சுபா சுந்தரத்தின் மகள் சித்ரா அலறும் குரல்கேட்டது. இதைக் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது சித்ரா தீயில் பாதிகருகிய நிலையில் உயிருக்குப் போராாடிக் கொண்டிந்தார்.
இதைப் பார்த்ததும் அதிர்ந்து போன அவர்கள் உடனடியாக சித்ராவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இறப்பதற்கு முன்பு டாக்டர்களிடம் சித்ரா கொடுத்த மரண வாக்குமூலத்தில், தனது பாட்டி மருத்துவமனைக்குசென்றிருந்ததாகவும் சகோதரனும் வெளியே போயிருந்த போது வீட்டுக்குள் வந்த 2 பேர் தன் மீதுமண்ணெண்ணை ஊற்றித் தீ வைத்ததாகக் கூறினார்.
ஆனால் சுபா சுந்தரத்தின் வீட்டுக்குப் போக வேண்டுமானால் தங்களது வீடுகளைத் தாண்டித் தான் யாரும் போகமுடியும் என்றும் யார் வந்தாலும் தங்களுக்குத் தெரிந்து விடும் என்றும் ஆனால் அவரது வீட்டுக்கு யாரும் போனதுபோல் தெரியவில்லை என்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் கூறினர்.
எனவே இது தற்கொலை முயற்சியாகத் தான் இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் சுபாசுந்தரத்தின் வீட்டிலிருந்து எந்தப் பொருளும் திருடு போகவில்லை வீட்டில் உள்ள பொருட்கள் எதுவும்கலைக்கப்படாமல் இருந்தது. இதுவும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications