அணு மின் நிலையங்களுக்கு பாதுகாப்பு: வாஜ்பாய் ஆலோசனை
குலு மணாலி:
இந்தியாவின் பொறுமை மிக வேகமாக காலியாகி வருவதாக உலக நாடுகளுக்கு பிரதமர் வாஜ்பாய் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் அட்டூழியத்தைக் கண்டிக்காத பல நாடுகளும் இந்திய பொறுமை காக்க வேண்டும் என்று வற்புறுத்திவருகின்றன. இதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாார்.
ஹிமாச்சலப் பிரதேசம் குலு மணாலியில் ஓய்வுக்காக சென்றுள்ள வாஜ்பாய் தொடர்ந்து எல்லை நிலவரம் குறித்துஆய்வு செய்து வருகிறார். ஓய்வுக்காக அவர் சென்றாலும் அவருக்கு சிறிது நேரம் கூட ஓய்வில்லை.
ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்புஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா ஆகியோரை மாறிமாறி வாஜ்பாயைச் சந்தித்து வருகின்றனர்.
நேற்று கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் இந்திய அணு சக்திக் கமிஷனின் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டுபிரிஜேஷ் மிஸ்ரா நேராக மணாலி சென்று பிரதமரைச் சந்தித்தார்.
அணு சக்திக் கமிஷன் கூட்டம் வழக்கமான ஒன்று என்று கூறப்பட்டாலும் கூட அணு ஆயுதங்களை தயார்நிலைக்குக் கொண்டு வருவது குறித்தும், பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால் ஏற்படும் இழப்புகள்,அதை சமாளிப்பது, இந்திய அணு மின் நிலையங்களை எதிரி நாட்டுப் படையின் தாக்குதலில் இருந்து சமாளிப்பதுஆகியவை குறித்து முழு அளவில் விவாதிக்கப்பட்டு திட்டமும் தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த விவரங்களுடன் தான் வாஜ்பாயை பிரிஜேஷ் மிஸ்ரா சந்தித்தார். மிஸ்ராவுடன் வாஜ்பாய் விரிவானஆலோசனை நடத்தினார்.
முன்னதாக கல்பாக்கம் செல்வதற்காக மிஸ்ரா சென்னை வந்தார். இதனால், விமான நிலையத்தில் கடும்பாதுகாப்புப் போடப்பட்டது. அங்கிருந்து அவர் சிறப்பு ஹெலிகாப்டரில் கல்பாக்கம் அழைத்துச் செல்லப்பட்டார்.அதே ஹெலிகாப்டரில் சென்னை திரும்பிய அவர் சிறப்பு ராணுவ விமானத்தில் குலு மணாலிக்குச் சென்றார்.
இந் நிலையில் மணாலியில் நிகழ்ச்சியொன்றில் பேசிய வாஜ்பாய்,
தீவிரவாதத்துக்கு எதிராக போர் தொடுக்க இந்தியா தயாராகிவிட்டது. இந்தப் போரில் நிச்சயம் வென்றுகாட்டுவோம். எங்கள் பொறுமை மிக வேகமாகக் காலியாகிக் கொண்டிருக்கிறது என்பதை உலக நாடுகள் உணரவேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications