எலியால் ஒலித்த வங்கியின் அபாய மணி
சென்னை:
சென்னை திருவொற்றியூல் உள்ள அரசு வங்கியின் அபாய மணி திடீரென அலறியது.
இதையடுத்து கொள்ளையர்கள் நுழைந்துவிட்டதாகக் கருதிய போலீசார் ஆயுதங்களுடன் அதை சுற்றி வளைத்தனர். ஆனால், திருடனைஎதிர்பார்த்து உள்ளே நுழைந்த போலீஸாருக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது. அபாய மணியின் வயரை எலி கடித்ததால்தான் இந்தசப்தம் எழுந்துள்ளது.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மக்கள் நெரிசல் மிக்க இடத்தில் அந்த வங்கி உள்ளது. இரவில் வங்கியின் அபாய மணி திடீரென்றுஅலறியது. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர். வங்கிமேலாளருக்கும் தகவல் தரப்பட்டது. சாவியுடன் அவரும் வந்து சேர்ந்தார்.
பின்னர் போலீஸார் வங்கியைத் திறந்து உள்ளே நுழைந்தனர். ஆனால் உள்ளே கொள்ளையர்கள் யாரையும் காணவில்லை. பின்னர் அபாயமணி பொருத்தப்பட்ட இடத்தைப் பார்த்தபோது அதன் வயரை எலி கடித்திருந்தது தெய வந்தது. இதன் காரணமாகவே மணி அலறியுள்ளது.
இச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு நிலவியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications