வட தமிழகத்தில் வெயில் குறைந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரம் உள்ளிட்ட வடக்குத் தமிழகத்தில் கடந்த பல வாரங்களாக வீசி வந்த கொடுமையான வெயிலும், அனல் காற்றும் குறைந்துவிட்டது. அக்னி நட்சத்திரம் நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைவதால் கடும் வெயில் குறைந்து மாலை நேரங்களில் குளிர்ந்தகாற்று வீசத் தொடங்கியுள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடந்த பல நாட்களாக கடும் வெயில் அடித்து வந்தது. மேலும் கத்திரி எனப்படும்அக்னி நட்சத்திரம் வேறு நடந்து வருவதால் வெளியில் தலை காட்ட முடியாமல் மக்கள் பெரும் அவதிப்பட்டனர். மின்தடையால் பேனும்இல்லாமல் வீட்டுக்குள்ளும் இருக்க முடியாமல், வெளியிலும் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

தினசரி சராசரியாக 110 டிகிரி வரை வெயில் அடித்து வந்த நிலையில் அக்னி நட்சத்திரம் செவ்வாய்க்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது.இதையடுத்து வெயில் கொடுமை ஓரளவு குறைய ஆரம்பித்துள்ளது.

வெயிலின் அளவு 97டிகிரியாகக் குறைந்துள்ளது. மேலும், மாலை நேரங்களில் காற்றும் வீசுகிறது. இதனால் வெயில் கொடுமை குறைந்துமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்.

இன்னும் சில வாரங்களில் பருவ மழை பெய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையைப் பொருத்தவரை அனேகமாகஜூன் முதல் வாரத்தில் மழை பொழியும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+