சைதாப்பேட்டையில் ஜெ.-கருணாநிதி- வைகோ உச்சகட்டப் பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபை இடைத் தேர்தலுக்கான பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளசைதாப்பேட்டை தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக தலைவர் வைகோ, கம்யூனிஸ்ட்கட்சியினர் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுகவின் கோட்டையாக வர்ணிக்கப்படும் இங்கு திமுகவின் தீவிர தொண்டனாக இருந்து சில ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில்சேர்ந்த ராதாரவி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

திமுக சார்பில் மா.சுப்ரமணியன், மதிமுக சார்பில் பா.சுப்ரமணியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நந்தகோபால்ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி வாணியம்பாடியில் தனது இடைத் தேர்தல் பிரசாரத்தைத் துவக்கினார். திமுக வேட்பாளராகப்போட்டியிடும் பாடகர் நாகூர் ஹனீபாவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் பின்னர் அச்சிறுப்பாக்கம் சென்றார்.

அங்கு பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் பார்வேந்தனை ஆதரித்து 2 நாட்கள் பிரசாரம் செய்தார். பா.ம.க. தலைவர் ராமதாஸும்கருணாநிதியுடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந் நிலையில் கடைசி கட்டமாக சைதாப்பேட்டையில் திங்கள்கிழமை தனது பிரசாரத்தைத் துவக்குகிறார் கருணாநிதி. இங்கு வீதிவீதியாக அவர் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். மொத்தம் 3 நாட்கள் இத் தொகுதியில் பிரசாரம் செய்யவுள்ளார் கருணாநிதி.

29ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஆலந்தூர் சாலை ஐந்து விளக்கு பகுதியில் பிரச்சார இறுதிப் பொதுக் கூட்டம் நடக்கிறது. அதில்கருணாநிதி பேசுகிறார்.

சைக்கிளில் திமுவினர் வாக்கு சேகரிப்பு:

சைதாப்பேட்டை தொகுதியில் திமுகவின் சைக்கிள் பேரணியை மாவட்ட செயலாளர் சைதை கிட்டு இன்று காலை தொடங்கிவைத்தார்.

திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியத்தை ஆதரித்து இந்த சைக்கிள் பேரணி நடந்தது. ஜாபர்கான் பேட்டையில் தொடங்கிய சைக்கிள்பேரணி பல்வேறு பகுதிகள் வழியாக பயணம் செய்தது. முன்னாள் அமைச்சர்கள் தங்கவேலு, ரகுபதி ஆகியோர் சைக்கிளில் சென்றுதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தனர்.

ஜீப்பில் ஜெ. பிரச்சாரம்:

வாணியம்பாடியில் 3 நாள், அச்சிரபாக்கத்தில் 4 நாள் சூறாவளி பிரசாரப் பயணத்திற்குப் பிறகு சென்னை வந்து சேர்ந்து முதல்வர்ஜெயலலிதா, சைதாப்பேட்டையில் தனது பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை துவக்கினார்.

போக் ரோடு குடிசைப் பகுதியிலிருந்து தனது பிரசாரத்தைத் துவக்கிய ஜெயலலிதா அப்துல் ரசாக் தியேட்டர் சந்திப்பில் தனது முதல்நாள் பிரசாரத்தை முடித்தார்.

ஜெயலலிதா சென்ற இடமெல்லாம் கூட்டம் அலை மோதியது. தனியாக ஒரு ஜீப்பில் கூடவே வேட்பாளர் ராதாரவியும்கும்பிட்டவாறே கூட வந்தார். ஜெயலலிதா சில இடங்களில் பேசினார். அவரது பேச்சின் சில துளிகள்:

  • சென்னை நகரின் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் புதிதாக வாங்கப்படவுள்ள 3000 பேருந்துகளில் சில மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கப்படும்.

  • அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு பஸ்களில் பயணம் செய்வது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கிறது (மக்கள் அப்படி சொல்லலையே..!!!). ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் கஷ்டத்துடன் தான் பயணம் செய்தார்கள்.

    மொத்தம் 3 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையும்ஜெயலலிதா தொடர்ந்து சைதாப்பேட்டையில் பிரசாரம் செய்கிறார். ஜீப்பில் அமர்ந்தவாறே ஒருபுறம் ஜெயலலிதா ஓட்டுக் கேட்டுவருகிறார்.

    இன்றும் அவர் தீவிர பிரச்சாரம் செய்கிறார்.

    வைகோ:

    தனது கட்சியின் வேட்பாளர் ப.சுப்பிரமணியத்தை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இங்கு மதிமுகவுக்குஆதரவாக பா.ஜ.கவினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றும் காலையிலேயே வைகோ தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

    கம்யூனிஸ்ட் பிரச்சாரம்:

    சைதாப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் நந்தகோபாலுக்காக அக் கட்சியினர் தெருத் தெருவாக நடந்து போய் ஓட்டுக்கேட்டு வருகின்றனர்.

    ஒவ்வொரு தெருவிலும் அவர்கள் சென்று ஓட்டுக் கேட்டபு வருகின்றனர். வேட்பாளர் நந்தகோபாலும் வீடு வீடாக நடந்து சென்று ஓட்டுக் கேட்டுவருகிறார். Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+