எல்லாம் முடிந்த பின் வந்த போலீஸ் !!
சென்னை:
சென்னையில் பணியில் இருந்தபோது இறந்த பெண் போலீஸ் கான்ஸ்டபிளின் இறுதிச் சடங்கில் அரசு சார்பில் கலந்து கொள்ள வேண்டியஆயுதப் படை போலீஸார், காரியங்கள் எல்லாம் முடிந்த பின்னர் காலதாமதமாக வந்து சேர்ந்தனர்.
சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றியவர் அனிதா. இவர் சமீபத்தில் உடல் நலக்குறைவுகாரணமாக மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதைகளுடன் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்துஇறுதிச் சடங்கின்போது துப்பாக்கிகளால் வானை நோக்கி சுடுவதற்காக ஆயுதப் படை போலீஸார் வருவார்கள் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது.
இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் நடைபெறுவதாக ஆயுதப் படைபோலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இறுதிச் சடங்கிற்காக அனைவரும் வந்து விட்டனர். இறுதி மரியாதை செலுத்த வேண்டிய ஆயுதப்படை போலீஸாருக்காக அனைவரும் காத்துக் கொண்டிருந்தனர்.
இவர்களுக்காக உடலுடன் பல மணி நேரம் அனிதாவின் வீட்டினர் கல்லறையில் காத்திருந்தனர்.
ஆனால் அவர்கள் வரவில்லை. இதையடுத்து அரசு மரியாதை ஏதும் இல்லாமலேயே இறுதிச் சடங்கு நடந்து முடிந்தது. பின்னர் அனைவரும்கலைந்து சென்றனர்.
சிறிது நேரம் கழித்து ஆயுதப் படை போலீஸார் சாவகாசமாக துப்பாக்கிகளைத் தூக்கியபடி வந்தனர். ஆனால் அவர்களைத் தடுத்து நிறுத்தியகல்லறைத் தோட்ட வாட்ச்மேன், எல்லாம் முடிந்து அனைவரும் வீட்டுக்குப் போய் விட்டனர் என்று கூறி திருப்பி அனுப்பினார்.
ஆயுதப் படை போலீசாரின் செயல் நகர காவல்துறையினர் இடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications