கோட்டை தற்கொலைகள் .. ஜெயாவுக்கு ராமதாஸ் கண்டனம்
சென்னை:
சென்னைத் தலைமைச் செயலகத்திற்கு மனு கொடுக்க வருபவர்கள் வசதிக்காக மன நல ஆலோசனை நடத்தப்படும் என்றுமுதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளது அவமானமான செயல் என பாமக தலைவர் ராமதாஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
சமீப காலமாக தலைமைச் செயலகத்திற்கு மனு கொடுக்க வருபவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இதுவரை 3 பேர்தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து இந்தத் தற்கொலைகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாது என்றும், மனு கொடுக்கவருபவர்களுக்கு வசதியாக அங்கேயே மன நல ஆலோசனை முகாம் நடத்தப்படும் என்றும் சமீபத்தில் ஜெயலலிதா அறிவித்தார்.
இதை ராமதாஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரிடம் மனு கொடுக்க விரும்புபவர்களுக்குத் தேவை நிவாரணமே தவிர மனநல ஆலோசனை அல்ல.
வாழ்வதற்கே வழியற்ற நிலையில்தான் அவர்கள் முதல்வரைத் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்குத் தேவையானஉதவிகளைச் செய்வதை விட்டுவிட்டு மன நல ஆலோசனை முகாம் நடத்துவதுதாகக் கூறுவது பொருத்தமான பேச்சல்ல. இதுதமிழகத்துக்கே அவமானம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications