கோடைவிழா: கொடைக்கானலில் படகுப் போட்டி- ஏற்காட்டில் மலர் கண்காட்சி
கொடைக்கானல்:
கொடைக்கானலில் நடந்த சுற்றுலா பயணிகளுக்கான படகுப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இர்பான் சாகிப் சாம்பியன்பட்டம் வென்றார்.
கொடைக்கானலில் நடந்து வந்த கோடை விழா கோலாகலமாக முடிவடைந்தது. விழாவின் கடைசி நிகழ்ச்சியான படகுப் போட்டிகொடைக்கானல் ஏரியில் நடந்தது. இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
சீனியர், பெண்கள், ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஜூனியர் பிரிவில் கீர்த்தனாமற்றும் அருள் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆண்கள் இரட்டையர் போட்டியில் கொடைக்கானலைச் சேர்ந்த ஜோடி வெற்றிபெற்றது. ஒட்டு மொத்த போட்டிகளில் சென்னையைச் சேர்ந்த இர்பான் சாகிப் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு தட்டைப் படகுப் போட்டி கொடைக்கானலில் மட்டுமே நடத்தப்படுகிறது. அதிலும்இர்பான் சாகிப்பே வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் பரிசுகளை வழங்கினார்.
பிரபலமான வாத்துப் போட்டிக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் அந்தப் போட்டி மட்டும் நடக்கவில்லை.
ஆனால், கொடைக்கானல் வரும் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.வாகனங்களை நிறுத்த அதிக அளவில் பார்க்கிங் லாட்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
ஏற்காட்டில் 5000 வகை மலர்கள்:
ஏற்காட்டில் நடக்குமா நடக்காதா என்று சந்தேகத்தில் இருந்த கோடை விழா நேற்று தொடங்கியது. சேலம் மாவட்டகலெக்டர் ராதா கிருஷ்ணன் இதைத் தொடங்கி வைத்தார்.இங்கு தொடங்கிய மலர் கண்காட்சியில் சுமார் 5,000 வகையான மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தமலர்கள் ஊட்டி, கொடைக்கானல், பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து ஏற்காட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
காய்கறிகளால் ஆன பொம்மைகள், படகுப் போட்டி என இந்த ஏழைகளின் ஊட்டி களை கட்டியிருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications