தடையை மீறி ஒயின்ஷாப் நடத்தவிட்ட போலீசார் சஸ்பெண்ட்
மதுரை:
ஒயின் ஷாப்பில் மாமூல் வாங்கிக் கொண்டு அந்தக் கடையை மிலாத்-நபி அன்று திறக்க அனுமதித்தஇன்ஸ்பெக்டரும் இரு போலீஸ்காரர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கடந்த 25ம் தேதி மிலாது நபி பண்டிகை கொண்டாடப்பட்டது. மதுரையிலும் இதையொட்டி பேரணி நடந்தது.இதையடுத்து அசம்பாவிதங்கள், விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடப்பதைத் தடுக்க மதுரை நகரில் அனைத்துஒயின்ஷாப்களையும் மூடிவிட உத்தரவிடப்பட்டது.
ஆனால், திடீர் நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஒயின் ஷாப்களில் மட்டும் தண்ணி விற்கப்பட்டது. இதைஅந்த ஸ்டேசன் இன்ஸபெக்டர் கண்டுகொள்ளவில்லை. அவருக்கு தர வேண்டியது தரப்பட்டதால்கண்டுகொள்ளமல் இருந்துவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து இந்த இன்ஸ்பெக்டர், அவருக்கு துணையாக இருந்த 2 போலீசாரை மதுரை மாநகர காவல்துறைஆணையாளர் சூர்ய பிரசாத் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அதே போல அன்றைய தினம் கடையைத் திறந்து வைத்து சரக்கு விற்ற கடைக்காரர்கள் மீதும் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications