கள்ளச்சாராயம் காய்ச்சிய 22 பெண்கள் கைது

Subscribe to Oneindia Tamil

நெல்லை:

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட கள்ளச் சாராய வேட்டையின்போது 22 பெண்கள் உள்பட 61பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கள்ளச்சாராய புழக்கம் அதிகமாகி விட்டது. இதற்கு போலீசாரும் உடந்தை. அந்தந்தப் பகுதி காவல்நிலையங்களுக்கு உரிய மாமூல் போய்விடுவதால் அவர்களின் ஆசீர்வாதத்தோடு இந்த சாராயம் காய்ச்சுவது நடக்கிறது.

இந்த சாராயம் காய்ச்சுவதில் முக்கிய பங்கு வகிப்பது பெண்கள். அடுப்பை எரித்து சாராயத்தை காய்ச்சுவது, திருட்டுத்தனமாக புதர்மறைவுகளில் குடிக்க வருபவர்களுக்கு மீன் வருவல், ஆம்லேட் போட்டுத் தருவது பெண்கள் தான்.

அப்போதுபோது கணக்கு காட்டவும் வேலை பார்ப்பதாகக் காட்டிக் கொள்ளவும் இது போன்ற சாராய ரெய்டுகள் நடப்பதுவழக்கம். இதே போல சமீபத்தில் 21 கிராமங்களில் போலீஸார் சோதனை நடத்தினர்.

இதில் 22 பெண்கள் உள்ப 61 பேர் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக, விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனையின்போது ரூ. 5 லட்சம் மதிப்புள்ள சாராயம் மற்றும் ஊரல் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+