கண்ணாடியை "நறநற"வென்று கடித்து சாப்பிடும் சமையல்காரர்
குமாரபாளையம்:
குமாரபாளையத்தைச் சேர்ந்த ஒரு சமையல்காரர் கண்ணாடியை முறுக்கு, கற்கண்டு போல் கடித்துச் சாப்பிடும்அதிசயத்தை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள கிழக்கு காந்திபுரத்தைச் சேர்ந்தவர் அர்த்தனாரி சாமி (45). இவர்தன் தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் ஒரு சமையல் தொழிலாளி.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்வதற்காகக் கண்ணாடித் துகள்களை மென்று விழுங்கிய அர்த்தனாரிமறுநாளே உயிர் பிழைத்துக் கொண்டார். இதற்குப் பிறகே கண்ணாடி சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்று கூறிக்கொண்டு அடிக்கடி அதை "நறநற"வென்று நொறுக்கிச் சாப்பிட்டு மக்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து அர்த்தனாரி கூறியதாவது:
சமையல் செய்வது எங்களுடைய குடும்பத்தின் பரம்பரைத் தொழில். எனக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டுசகோதரிகளும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.நான் என் தாயாருடன் வசித்து வருகிறேன்.
எனக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளும் தெரியும். எனக்கு எட்டுவயதாகும் போது வீட்டை விட்டு வெளியேறி வடமாநிலங்களில் கூலி வேலை செய்து சம்பாதிக்கத்தொடங்கினேன்.
இன்று வரை சம்பாதித்துக் கொண்டே இருக்கிறேன். அந்த வகையில் ஒருமுறை கோவாவுக்கு சென்று மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டேன். அப்போது வாழ்க்கை மீது வெறுப்பு வந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.
இதையடுத்து பாட்டிலை நொறுக்கி கண்ணாடித்துகள்களை மென்று விழுங்கினேன். அது குடலில் சென்று கிழித்தால்வலி வருமே என்று பயந்து சாராயத்தையும் குடித்தேன். பிறகு தலை "கிர்"ரென்று சுற்றியது. நமது வாழ்க்கைஅவ்வளவு தான் என்று எண்ணி அப்படியே படுத்துவிட்டேன்.
ஆனால் மறுநாள் விடியற்காலையில் எப்போதும் போல் கண்விழித்தேன். அப்போது தான் தெரிந்தது நான்அதிர்ஷ்டவசமாக பிழைத்துக் கொண்டது. மேலும் கண்ணாடி தின்றதால் உடலிலோ வயிற்றிலோ எந்தவிதமானபாதிப்பும் எனக்கு ஏற்படததால் அதையே ஒரு சாதனையாக செய்ய நினைத்தேன்.
கடந்த 15 ஆண்டுகளாக மக்களுக்கு கண்ணாடி பாட்டிலை உடைத்து தின்று காட்டுகிறேன் என்று தன்னுடையசாதனை வரலாறைக் கூறினார் அர்த்தனாரி.
கண்ணாடித்துகள்களை நொறுக்கி அவர் தின்னும் போது, வாயில் கண்ணாடி கீறி விடாதபடி கவனமாக கடித்துதின்பதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக கண்ணாடி சாப்பிடும் இவருக்கு உடல்ரீதியாக எந்த கோளாறும் ஏற்படாததும் காண்போரைஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications