கோடை மழைக்கு 5 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கன மழைக்கு 3 சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.
அக்னி நட்சத்திரம் முடிவுற்ற நிலையில் புதன்கிழமை பிற்பகல் தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழைபெய்தது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நல்ல மழை பெய்தது.
இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல மழை நீர் இன்னும் தேங்கிக் கிடக்கிறது.
மணலி பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்த பெருமாள் நாயக்கர் என்பவரது வீட்டில் திடீரென மின்சாரம் தடைபட்டது.வெளியில் மழை பெய்து கொண்டிருந்ததால் அதை வேடிக்கை பார்ப்பதற்காக நாயக்கரின் குடும்பத்தினர் வெளியேவந்து நின்றனர். அவர்களுடன் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் நின்றிருந்தனர்.
அப்போது வீட்டின் ஜன்னல் சாளரம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் பரணிகுமார், பிரவீன் குமார் ஆகிய இருசிறுவர்களும் சிக்கி பலியாயினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இதேபோல, திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் கன மழைபெய்தது. தாம்பரம் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு பல இடங்களில் மின்கம்பங்கள்சாய்ந்து விழுந்தன.
சிவகங்கை மாவட்டத்தில் இடி தாக்கியதில் 55 வயது மூதாட்டியும், 52 வயது முதியவரும் பலியாயினர்.அதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வயது சிறுவன் பலியானான். அவன் ஆடு மேய்க்கும் சிறுவன். அவன்மேய்த்துக் கொண்டிருந்த 22 ஆடுகளும் பரிதாபமாக மின்னல் தாக்கி இறந்தன.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications