வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த 5 திமுகவினர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சைதாப்பேட்டையில் தங்கள் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த 5 திமுகவினர்கைது செய்யப்பட்டனர்.
நேற்று இரவு அடையாளச் சீட்டு கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திமுகவினர், தங்கள் கட்சிக்கு ஓட்டுப்போடும்படி கேட்டு வாக்காளர்களிடம் பணத்தையும் சேர்த்துக் கொடுத்தனர் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிஅதிமுக எம்.எல்.ஏவும் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மகனுமான இன்பத்தமிழன் போலீசாரிடம் புகார்கொடுத்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் திமுகவைச் சேர்ந்த ரமேஷ் (38), சாய் பாஸ்கர் (41), சிவசங்கரன் (38), ரவிராஜன்(36) மற்றும் ஸ்ரீதர் (35) ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.3,000 தொகையைக் கைப்பற்றிய போலீசார், அவர்கள் மீது ஒரு வழக்கையும் பதிவுசெய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications