உலகக் கோப்பை கால்பந்து: செனிகலுக்கு முதல் வெற்றி
சியோல்:
உலகக் கோப்பை கால்பந்து-2002 போட்டிகளின் முதல் சுற்றின் முதல் ஆட்டத்தில் தற்போதைய சாம்பியனானபிரான்சை 1-0 என்ற கோல் கணக்கில் செனிகல் அபாரமாகத் தோற்கடித்தது.
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு (இந்திய நேரப்படி) உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் தென்கொரியா நாட்டின் தலைநகரான சியோலில் கோலாகலமாகத் தொடங்கின.
முதல் சுற்றின் முதல் போட்டியில் பிரான்சும் செனிகலும் மோதின. பிரான்சின் நம்பிக்கை நட்சத்திரமான நடுக்களவீரர் ஜினெடின் ஜிடேன் இல்லாமலேயே அவ்வணி களமிறங்கியது.
"கோல் மன்னன்" என்று அழைக்கப்படும் அவர் இல்லாததே தங்கள் அணிக்கு ஒரு பெரும் பலமாக எண்ணிக்கொண்டு செனிகல் அணியினரும் மிகுந்த தன்னம்பிக்கையோடு ஆடத் தொடங்கினர்.
அவர்களுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. ஆட்டம் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே செனிகலின் பபாபாவ்பா தியோப் என்ற வீரர் இந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் முதல் கோலைப் போட்டார்.
அதன் பின் பிரான்ஸ் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தும் கோல் எதுவும் அவ்வணியினரால் போடமுடியவில்லை.
இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் செனிகல் அணி அபாரமாகத் தன்னுடைய முதல் வெற்றியைப் பெற்றது.
உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட தற்போது தான் முதல் முறையாக செனிகல் அணி தகுதி பெற்றுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியிலேயே தற்போதைய சாம்பியனான பிரான்சை அந்நாடுதோற்கடித்ததும் குறிப்பிடத்தக்கது.
சியோலில் நடைபெற்ற இந்த முதல் போட்டியை 64,640 ரசிகர்கள் மைதானத்திலேயே நேரில் கண்டு களித்தனர்.
நாளைய முதல் சுற்றுப் போட்டிகளில் உருகுவேயுடன் டென்மார்க்கும், ஜெர்மனியுடன் சவூதி அரேபியாவும்மற்றும் அயர்லாந்துடன் காமரூனும் மோதவுள்ளன.
விழாக் கோலம் பூண்ட சியோல்:
முன்னதாக 17வது உலகக் கோப்பை கால்பந்து-2002 போட்டிகள் இன்று மாலை முறைப்படி சியோலில் தொடங்கிவைக்கப்பட்டன.
தென் கொரிய அதிபர் கிம் டே-ஜுங் இந்தப் போட்டிகளைத் துவக்கி வைக்க இவற்றை இணைந்து நடத்தும்ஜப்பானின் பிரதமர் ஜுனிக்கிரோ கோய்சுமியும் இந்தத் துவக்க விழாவில் கலந்து கொண்டார்.
துவக்க விழாவின் போது தென் கொரியப் பெண்கள் ஆடிய பாரம்பரியம் மிக்க நடனங்களும், இசையும்உலகெங்கிலுமிருந்து வந்திருந்த ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தின.
உச்சகட்டமாக துவக்க விழாவின் இறுதியில் நடந்த வான வேடிக்கை நிகழ்ச்சிகள் கால்பந்து ரசிகர்களை மிகவும்பரவசப்படுத்தின.
இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மகன் ஆன்ட்ரூ மற்றும் முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் நாயகனானரோஜர் மூர் ஆகியோரும் இந்தத் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.
அடுத்த 31 நாட்களுக்கு இந்தக் கால்பந்துப் போட்டிகள் உலகையே கடும் ஜுரத்தில் ஆழ்த்தவுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications