பொன்முடி மீது அதிமுகவினர் கொலைவெறித் தாக்குதல்
சென்னை:
போலி ரேசன் கார்டுகள், போலி சாதிச் சான்றிதழ்களைக் காட்டி வாக்களித்தவர்களைத் தட்டிக் கேட்ட திமுகமுன்னாள் அமைச்சர் பொன்முடி அதிமுகவினரால் தாக்கப்பட்டார்.
அதே போல தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலி திமுக துணை மேயர் விஸ்வநாத பாண்டியனைஅதிமுகவினர் அரிவாளால் வெட்டினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுகவினர் ஏராளமான போலி வாக்காளர்களை தயார்செய்திருப்பதாகவும் அவர்களுக்கு தாசில்தார் அலுலகத்தில் இருந்து போலி சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டுவழங்கப்பட்டுள்ளதாகவும் திமுக புகார் கூறியுள்ளது.
இந் நிலையில் கோட்டூர்புரத்தில் இது போன்ற போலி ரேசன் கார்டைக் காட்டி வாக்களிக்க வந்தவர்களைபொன்முடி தடுத்து நிறுத்தியபோது அவரை அதிமுகவினர் சூழ்ந்து கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:
கோட்டூர்புரம் டி.டி.ஐ. பள்ளி வாக்குச் சாவடியில் போலி ரேசன் கார்டைக் காட்டி ஓட்டு போடப்படுவதாக அறிந்தநான் அங்கு சென்றேன். என்னுடன் திமுக தொண்டர்களும் வந்தனர். எங்களை போலீசார் தடுத்தனர். போலி ரேசன்கார்டுகள் குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என்று கூறினேன். இதையடுத்து வாக்குவாதம் செய்த போலீசார்என்னை மட்டும் வாக்குச் சாவடிக்குள் செல்ல அனுமதித்தனர்.
எங்கள் தொண்டர்களை வெளியிலேயே தடுத்துவிட்டனர். உள்ளே தனியாகப் போன நான் போலி ரேசன்கார்டுகளைக் காட்டி வாக்களிக்க வந்தவர்களிடம் கேளவி கேட்டுக் கொண்டிருந்தேன். தங்களுக்கு அதிமுகவினர்தான் இந்த கார்டுகளைத் தந்து வாக்களிக்க அனுப்பியதாக அவர்கள் கூறினர்.
அப்போது சுமார் 20 அதிமுகவினர் என்னை சுற்றி வளைத்தனர். திமுக தொண்டர்களை மட்டும் வெளியில் தடுத்தபோலீசார் இவர்களை எப்படி உள்ளே விட்டார்கள் என்று தெரியவில்லை.
அவர்கள் என்னிடம் வந்து ஒருமையில் நீ என்ன பெரிய இவனா, நீ தான் தேர்தல் அதிகாரியா என்று ஏகத்துக்கும்பேசினர். அவர்களிடம் நான் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தபோதே நான் கைப்பற்றியிருந்த போலி ரேசன்கார்டுகளைப் பறித்தனர்.
அப்போது 3 கார்கள் அங்கு வந்தன. குடிசை மாற்று வாரியத் தலைவர் பாலகங்கா (இவர் அதிமுகவின் முக்கியஅடிதடி ஆட்களில் ஒருவர்) தலைமையில் 10 பேர் அங்கு வந்தனர். பாலகங்கா என்னை முகத்தில் குத்தினார். நீஎன்ன பெரிய ஆபிசரா என்று கேட்டுக் கொண்டு தாக்கினார். அவருடன் வந்த அதிமுகவினரும் தாக்கினர்.
இதில் என் உதடு கிழிந்தது. வாய், கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதைத் தடுக்க வந்த திமுகவினரை போலீசார்தடுத்துவிட்டனர். ஆனால், அதிமுகவினர் என்னைத் தாக்க போலீசார் அனுமதித்தனர்.
இதை போலீசார் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். இதன் பின்னர் திமுகவினர் தான் என்னைக் காப்பாற்றிஅழைத்து வந்தனர் என்றார்.
பொன்முடியின் உதடு கிழிந்துள்ளது. முகத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அவரது கை, கால்களில் காயங்கள் உள்ளன.அவற்றை அவர் நிருபர்களிடம் காட்டினார்.
அதிமுகவினர் பல இடங்களில் கள்ள ஓட்டு போட்டதாக பரவலாக புகார் கூறப்பட்டுள்ளது.
திமுகவுடன் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் சைதாப்பேட்டையில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications