சைதை தேர்தல் முறைகேடு: டெல்லியில் திமுக உண்ணாவிரதம்
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதியில் நேற்று வாக்குப்பதிவின் போது அதிமுகவினர் நடத்திய முறைகேடுகளைக் கண்டித்துதிமுக எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் விரைவில் டெல்லி சென்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளனர்.
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
சைதாப்பேட்டை இடைத் தேர்தலின் போது அதிமுகவினர் ஜனநாயகத்தின் குரல் வளையை முறிக்கும் அளவுக்குவன்முறையில் ஈடுபட்டனர்.
தமிழக தேர்தல் வரலாற்றிலேயே இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்ததே இல்லை.
ஆனால் தொகுதி முழுவதும் சுற்றி வந்த தேர்தல் பார்வையாளர்கள் எதையும் கண்டு கொண்டது மாதிரியேதெரியவில்லை.
எனவே இந்தப் பிரச்சனையை நாங்கள் தேசிய அளவில் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம். திமுக எம்.பிக்கள்மற்றும் எம்.எல்.ஏக்கள் விரைவில் டெல்லி சென்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
இதன் மூலமாவது தலைமைத் தேர்தல் கமிஷன் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்க வழி ஏற்படும் என்றுநம்புகிறோம் என்றார் கருணாநிதி.
திமுக வாக்கு எண்ணிக்கையைப் புறக்கணிக்குமா என்று நிருபர்கள் கேட்டதற்கு இதுகுறித்து நாங்கள் இன்னும்முடிவு செய்யவில்லை என்றார் அவர்.
சாரங்கிக்கு கருணாநிதி கடிதம்:
முன்னதாக, சைதாப்பேட்டையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடவேண்டும் என்று கோரி தமிழகத் தலைமைத் தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கிக்கு கருணாநிதி கடிதம்எழுதியுள்ளார்.
கருணாநிதி தன் கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தாசில்தார்கள் அளித்துள்ள வெற்று சாதி சான்றிதழ்களைப் பயன்படுத்தி அதிமுகவினர் சராமாரியாகக் கள்ளஓட்டுக்களைப் போட்டுள்ளனர். காதர் இஸ்மாயில் என்பவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள சாதி சான்றிதழில் அவர்இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பல சாதி சான்றிதழ்களில் தாசில்தாரின் போலி கையெழுத்துக்கள் போடப்பட்டுள்ளன. ஆனால் அதிமுகவினர்கொண்டு வந்து காட்டிய அந்த சான்றிதழ்களையும் ஏற்றுக் கொண்ட வாக்குச் சாவடித் தேர்தல் அதிகாரிகள்அவர்களை ஓட்டுப் போட அனுமதித்துள்ளனர்.
திமுகவின் தேர்தல் ஏஜென்டுகளை வாக்குச் சாவடிகளுக்குள் செல்ல விடாமல் அதிமுகவினர் தடுத்துள்ளனர். பலஅதிமுக அமைச்சர்களும் பல வழிகளிலும் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டுள்ளனர்.
எனவே சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மறு தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications