அணு ஆயுத போர்: 1.2 கோடி பேர் பலியாவார்- பென்டகன்
வாஷிங்டன்:
இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் மொத்தம் 90 லட்சம் முதல் 1.2 கோடி பேர் வரைஉடனடியாக உயிரிழப்பர் என அமெரிக்காவின் பாதுகாப்புதுறை உளவுப் பிரிவான பென்டகன் கருதுகிறது.
பென்டகன் நடத்திய ரகசிய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. பென்டகனின் இந்த ரகசிய ஆய்வை சுட்டிக் காட்டிஅமெரிக்க பாதுகாப்பு அதிகாரியொருவர் கூறுகையில்,
உடனடி சாவுகள் தான் இவை. இது தவிர அணுக் கதிர்வீச்சால் ஏற்படும் உடல் நலக் கோளாறு, நீர் கெட்டுப்போவதால் ஏற்படும் இழப்புகள், பட்டினியால் ஏற்படும் சாவுகள், உடல்கோளாறுகளுடன் பிறக்கும்குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இன்னும் பென்டகன் கணக்கிடவில்லை.
கடந்த வாரம் நடந்த பென்டகனின் உயர் மட்டக் கூட்டத்தில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. அப்போதுபென்டகன் மதிப்பிட்டுள்ள இழப்புகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
உடனடியாக காயமடைபவர்களின் எண்ணிக்கை 20 லட்சம் முதல் 60 லட்சம் வரை இருக்கும் என்றும் பென்கன்மதிப்பிட்டுள்ளது.
இரு நாடுகளிடமும் உள்ள அணு ஆயுதங்கள், இரு நாடுகளின் இலக்குகள் ஆகியவை குறித்தும்விவாதிக்கப்பட்டன. அவை மிகச் சரியாக தங்கள் இலக்குகளை அடைந்து தரையில் விழுந்து வெடித்தால் ஏற்படும்சேதத்தின் அளவு தான் இது.
விண்ணில் இந்த அணுகுண்டுகள் வெடித்தால் தரையில் வெடிக்கும் அளவுக்கு சேதம் ஏற்படாது என்றார் அந்தஅதிகாரி.
ஐ.நாவும் காலி செய்கிறது:
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அமெரிக்க தூதரக குடும்பத்தினரைவெளியேற்ற அந் நாடு முடிவு செய்துள்ளது. அணு ஆயுத பயம் காரணமாக அமெரிக்கா இந்த முடிவெடுத்துள்ளது.
இந் நிலையில் ஐக்கிய நாடுகள் சபையும் தன் ஊழியர்களை இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானில் இருந்தும்வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சில தினங்களில் இவர்கள் வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது.
கடந்த வாரம் தான் பிரிட்டன் தனது தூதரக ஊழியர்களில் 150 பேரை பாகிஸ்தானில் இருந்து திரும்ப அழைத்தது.அமெரிக்காவும் ஏற்கனவே தனது ஊழியர்களில் பெரும்பகுதியினரை பாகிஸ்தானில் இருந்துவெளியேற்றிவிட்டது.
கனடா, நியூசிலாந்தும் இதே போல தங்கள் ஊழியர்களை இந்தியா, பாகிஸ்தானில் இருந்து வெளியேற்ற முடிவுசெய்துள்ளன.
இந்தியாவுக்குள் இருக்கும் பிற அமெரிக்கர்களையும் உடனே நாடு திரும்புமாறு அந் நாடு கூறியுள்ளது.
ஆனால், தேவையில்லாமல் அமெரிக்கா கலக்கம் அடைவதாக இந்தியத் தூதர் கூறியுள்ளார். இப்போதுசிங்கப்பூரில் உள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அமெரிக்காவின் இச் செயல் குறித்துகருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications