சைதை: தேர்தல் முறைகேடு குறித்து அறிக்கை அனுப்பினர் அதிகாரிகள்
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை தொகுதி இடைத் தேர்தல் வாக்கப் பதிவின்போது அதிமுகவினர் செய்த முறைகேடுகள்குறித்து மத்திய தேர்தல் பார்வையாளர்கள் இன்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பினர்.
சென்னை மாவட்டக் கலெக்டர் உள்ளிட்ட 3 பேர் இது தொடர்பாக தொகுதியின் வாக்குப் பதிவு அதிகாரிகளிடம்விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில் மத்திய தேர்தல் கமிஷனுக்கு அவர்கள் அறிக்கைஅனுப்பினர்.
அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. இந்த 3 தேர்தல் பார்வையாளர்களும் முன்னதாகதமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் மிருத்யுஞ்சய் சாரங்கியுடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்புக்குப் பின் வெளியே வந்த மூவரையும் நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். சைதாப்பேட்டையில் மறுதேர்தல் வருமா, முறைகேடுகள் நடந்த வாக்குச் சாவடிகளில் மட்டும் மறு வாக்குப் பதிவு நடத்தப்படுமா என்றுநிருபர்கள் கேட்டனர்.
ஆனால், சென்னை மாவட்ட கலெக்டர் உள்பட 3 அதிகாரிகளும் பதிலளிக்க மறுத்துவிட்டனர். தலைமைத் தேர்தல்ஆணையத்துக்கு நடந்த விஷயங்கள் குறித்து அறிக்கை அனுப்பியுள்ளோம். இனி தேர்தல் ஆணையம் தான்அடுத்தகட்ட அறிவிப்பை வெளியிடும் என்றனர்.
இதற்கிடையே திமுக தொழிற்சங்கத் தலைவரும் எம்.பியுமான குப்புசாமி, சைதாப்பேட்டை திமுக வேட்பாளர்ம.சுப்பிரமணியம், முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர்சாரங்கியைச் சந்தித்து சைதாப்பேட்டையில் மீண்டும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சைதாப்பேட்டையின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அதிமுகவினர் கள்ள ஓட்டு போட்டு தேர்தலைசூறையாடிவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதியும் கூறியுள்ளார். இங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என அவர்கோரியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications