நக்கீரன் நிருபர் சிறையில் திடீர் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம் திடீரென்றுகாலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பாக சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டு போலீஸ்விசாரணைக்குப் பிறகு அவர் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிறைக்குள்ளேயே சிவசுப்பிரமணியம் திடீரென்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைமேற்கொண்டுள்ளார்.
சிறை ஊழியர்கள் தனக்கு அடிப்படை வசதிகள் கூட தர மறுக்கிறார்கள் என்பதால் தான் உண்ணாவிரதம்இருப்பதாக அவர் கூறினார்.
சிறை ஊழியர்களின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டிப்பதாகவும் சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications