திருடனுடன் சேர்ந்து திருட்டு நகைகளை விற்ற போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்
கோவில்பட்டி:
திருடனுடன் சேர்ந்து கொண்டு திருட்டு நகைகளை நகைக் கடையில் விற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.
கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய குற்றப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் உத்திரவாசகம். இவர்வட்டிக்குப் பணம் விடுவதையும் "சைட் பிசினஸாக" செய்து வருகிறார். நகைகளைக் கொடுத்து இவரிடம் பணம்வாங்கிச் செல்லலாம்.
சஹாய மணி என்பவர் சமீபத்தில் கேரளாவில் 250 பவுன் நகைகளைத் திருடிக் கொண்டு கோவில்பட்டி வந்துசேர்ந்தார். அங்கு நகைகளை விற்க முயன்றபோது ஒரு நகைக் கடையிலும் அதை வாங்கிக் கொள்ளவில்லை.திருட்டு நகைகளாக அவை இருக்கலாம் என்று கருதியதால் அவர்கள் வாங்க மறுத்தனர்.
இதனால் என்ன செய்வது என்று விழித்த சஹாய மணி, நகைகளை எடுத்துக் கொண்டு உத்திரவாசகத்திடம் வந்துநகைகளை விற்கத் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அந்த நகைகளை எடுத்துக் கொண்டு சஹாய மணியுடன் தெற்கு பஜார் வீதியில் உள்ள கணேசன்என்பவரது நகைக் கடைக்கு வந்தார் உத்திரவாசகம். கணேசனை சமாதானப்படுத்தி நகைகளை வாங்கிக்கொள்ளுமாறு செய்தார்.
நகைகளை வாங்கிக் கொண்ட கணேசன் அதற்குப் பதிலாக அவர்களிடம் ரூ.1.12 லட்சம் பணம் கொடுத்தார்.
சில நாட்களில் கேரள போலீசார் சஹாய மணியின் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டு கோவில்பட்டி வந்தனர்.அவரைக் கைது செய்து கேரளா கொண்டு சென்று விசாரித்த போது தான் உத்திரவாசகம் திருட்டு நகைகளை விற்கஉதவியது குறித்துத் தெரிய வந்தது.
இதுதொடர்பாக கோவில்பட்டி டிஐஜியிடம் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணைக்குப் பின் உத்திரவாசகத்தைசஸ்பெண்ட் செய்யுமாறு மாவட்ட எஸ்.பி. சுமித் சரண் உத்தரவிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications