தேவாரத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு
சென்னை:
வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள அதிரடிப்படையின் தலைவராக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்ட முன்னாள் தமிழகடி.ஜி.பி. வால்டர் தேவாரத்தின் பதவிக்காலம் கடந்த 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவரது பதவிக் காலத்தைமுதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஓராண்டுக்கு நீட்டிதுள்ளார்.
ஓராண்டு காலம் மட்டுமே வரையறுக்கப்பட்ட இவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இவரதுபதவிக்காலத்தை மேலும் ஓராண்டு, அதாவது, அடுத்த ஆண்டு மே மாத இறுதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வீரப்பனின் ஆள்பலம் குறைந்து விட்டதாகவும், வீரப்பனின் கூட்டாளிகளாக ஒரு சிலரே வீரப்பனுடன் இருப்பதாகவும், இதனால்வீரப்பன் பிடிபட அதிக வாய்ப்புள்ளதாகவும் தமிழக அரசு கருதுவதால் தேவாரத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகதமிழக அரசு கூறியுள்ளது.
பதவியிலிருந்து விலகிவிட தேவாராம் ஆர்வம் காட்டினார். அவரது செயல்பாடுகள் குறித்து குறைகள் கூறப்பட்டதால் அவர் இந்தமுடிவுக்கு வந்திருந்தார். ஆனால், இதையும் மீறி அவருக்கு பதவி நீட்டிப்பு தநதுள்ளார் ஜெயலலிதா.
மேலும், இதே போல் தமிழக அரசின் வீண் செலவுகளை குறைப்பதை குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிஏ.எம்.சுவாமிநாதனை கொண்டு கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. இதன் பதவிக்காலமும் நேற்றுடன் முடிவடைந்தது. இந்தகமிஷனின் பதவிக்காலத்தையும் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இக் கமிஷன் கொடுக்க பரிந்துரையின்பேரில் தான் அரசு ஊழியர்களுக்கு பலவிதமான சலுகைகளை ரத்துசெய்து, அதிகாரிகளின்செலவுகளுக்கு பல கட்டுப்பாடுகளையும் அரசு விதித்தது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications