சைதையில் போராட்டம் நடத்திய ராமதாஸ் கைது
சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் இடைத் தேர்தலின்போது போலீசார் உதவியுடன் அதிமுகவினர் தேர்தலை சூறையாடியதாகக் கூறி அதைக்கண்டித்து இன்று போராட்டம் நடத்திய பா.ம.க. தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அவருடன் 7 எம்.எல்.ஏக்களும் கைதாகினர்.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று காலை 10 மணிக்கு இந்த ஆர்பாட்டம் தொடங்கியது. ஏராளமான பா.ம.கவினர் அங்குகுவிந்திருந்தனர். பா.ம.க. எம்.எல்.ஏ. மணி தலைமையில் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ராமதாஸ் அங்கு வந்தார்.அவர்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து அங்கு வந்த காவல்துறை இணை ஆணையர் சண்முகராஜேஸ்வரன், போராட்டத்துக்கு அனுமதி வவங்கப்படாததால்அனைவரையும் கைது செய்வதாக அறிவித்தார். அனைவரையும் வேனில் ஏற்ற உத்தரவிட்டார். இதை எதிர்த்து பா.ம.கவினர் வாக்குவாதம்செய்தனர். நாங்கள் தான் அனுமதி கேட்டோமே என அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
இதற்கு போலீசார், நாங்கள் தான் உங்களுக்கு அனுமதி தரவில்லையே என்று கூறி கைது செய்வதாக அறிவித்தனர்.
இதையடுத்து தனது தொண்டர்களை அமைதிப்படுத்திய ராமதாஸ் தங்களை கைது செய்து கொள்ளுமாறு போலீசாரிடம் தெரிவித்தார்.இதையடுத்து ராமதாஸை முதலில் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். தொடர்ந்து பா.ம.க. தொண்டர்கள் அனைவரும் கைதாகிவேன்களில் ஏறினர்.
இவர்கள் அனைவரும் வடபழனியில் ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள்என்பது குறித்து போலீசார் பதில் கூற மறுத்துவிட்டனர்.
திமுகவும் போராட்டத் திட்டம்:
இடைத் தேர்தல் நடந்த விதத்தைக் கண்டித்து திமுக சார்பில் 5ம் தேதி மாநிலம் முழுவதிலும் நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்புகண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவல்துறையின் துணையோடு, சைதை தொகுதியில் அதிமுகவினர் நடத்திய காட்டுத் தர்பாரைக்கண்டித்தும், தேர்தல் முறைகேடுகளைக் கண்டித்தும், தேர்தல் ஆணையத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும்,
தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நகராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு 5ம் தேதி காலை 10 மணிக்குதிமுகவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்துவர் என்று கூறியுள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications