சைதையில் 5000 வாக்களர்களில் குழப்பம்: கருணாநிதி
சென்னை:
58 வாக்குச் சாவடிகளில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது வெறும் கண்துடைப்பு என்றும் அது தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மேலும் அங்கு 5000 வாக்காளர்களின் பெயர்கள் இருமுறை இடம் பெற்றுள்ளதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தொகுதி முழுவதிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்பதையே நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த 58வாக்குச் சாவடிகளிலும் முறையாகத் தேர்தல் நடைபெறுமா என்பதை தமிழகத் தலைமைத் தேர்தல் கமிஷனர்மிருத்யுஞ்சய் சாரங்கியைத் தான் கேட்க வேண்டும்.
ஏற்கனவே கையெழுத்து இல்லாத ஆயிரக்கணக்கான தாசில்தர் சான்றிதழ்களை வழங்கி வாக்குச் சாவடிஅதிகாரிகளை மிரட்டியே ஆளுங்கட்சி அடியாட்கள் ஓட்டுப் போட்டனர். தற்போது இவற்றைத் தடுக்க தேர்தல்கமிஷன் என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை.
தேர்தல் கமிஷன் பாரபட்சமாகத் தான் நடந்து கொள்கிறது. இல்லையென்றால் தொகுதி முழுவதுமே மறு தேர்தல்நடத்த உத்தரவிட்டிருப்பார்கள்.
தொகுதி முழுவதும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை தேர்தல் கமிஷன் ஏற்காமல் 58வாக்குச் சாவடிகளில் மட்டும் மறு வாக்குப்பதிவு என்று அறிவித்துள்ளது. இதனால் எங்களுக்குத் திருப்தியில்லை.மாறாக மன வேதனையைத் தான் இந்த அறிவிப்பு தந்துள்ளது என்றார் கருணாநிதி.
தேர்தல் கமிஷனின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகனும் தான்விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இருப்பினும், சைதை தேர்தல் முறைகேடுகளைக் கண்டித்து சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புநடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தை திமுக ரத்து செய்துள்ளது. இங்கு நடக்கவுள்ள போராட்டத் தேதி குறித்து பின்னர்அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மற்ற மாவட்டங்களில் தாசில்தார் அலுவலகங்களின் முன் வழக்கம் போல இன்று போராட்டம்நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications