பஸ் கட்டணம் உயராது... அமைச்சர் உறுதி
சென்னை:
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம்அரசுக்கு இல்லை என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
டீசல் விலை உயர்ந்தால் பஸ் கட்டணம் உயரும் என்று பல மாநில அரசுகளும் ஏற்கனவே அறிவித்திருந்தன.இந்நிலையில் நேற்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டன.
இந்நிலையில் சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தைபுதன்கிழமை துவக்கி வைத்து விஸ்வநாதன் கூறுகையில்,
டீசல் கட்டணம் உயர்ந்திருப்பதால் பஸ் கட்டணம் உயர்த்தப்படும் என்ற செய்தி வெறும் வதந்தி தான். அப்படி ஒருஎண்ணமே அரசிடம் இல்லை. போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம்செலவீனங்களை அரசு சமாளிக்கும்.
சென்னையில் ஆன்லைன் மூலம் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம்உள்ள 925 பள்ளிகளைச் சேர்ந்த 3.5 லட்சம் மாணவ-மாணவியருக்கு இந்த முறை மூலம் பாஸ்கள் வழங்கப்படும்.
இதற்காக எடுக்கப்படும் புகைப்படத்திற்கு மட்டும் மாணவ-மாணவியர் ரூ.15 கொடுக்க வேண்டும். இத்திட்டம்வெற்றியடைந்தால் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இலவச பஸ் பாஸ் வழங்குவதன் மூலம் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும்என்றார் விஸ்வநாதன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications