டி.சியை வயர்லெஸ்சில் திட்டிய ஏ.சி. சஸ்பெண்ட்
மதுரை:
போலீஸ் துணை கமிஷனரின் உத்தரவுகளை மதிக்காததோடு, வயர்லஸ்ஸில் அவரை அவதூறாக பேசிய உதவி போலீஸ் கமிஷனர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரையில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. மதுரை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருப்பவர் அபின் மோதக் திணேஷ். குற்றப்பிரிவில் உதவி கமிஷனராக இருப்பவர் குப்புசாமி. மே 20ம் தேதி இருவரும் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவு 12 மணியளவில் இருவரும் வேறு வேறு பகுதிகளில் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது குப்புசாமியை வயர்லஸ்ஸில்கூப்பிட்ட அபின் மோதக் திணேஷ் அவரை உடனடியாக தேவர் சிலை அருகே வருமாறு பணித்தார்.
ஆனால் துணை கமிஷனரின் உத்தரவைக் கண்டு கொள்ளாத குப்புசாமி, சுமார் ஒரு மணி நேரம் கழித்து அந்தப் பகுதிக்கு வந்துள்ளார்.ஆனால் துணை கமிஷனரின் ஜீப்பை தாண்டி வேகமாக சென்றார்.
இதைப் பார்த்து அதிர்ந்த அபின் மோதக் திணேஷ், குப்புசாமியை வயர்லஸ்ஸில் அழைத்து உடனடியாக தன்னுடைய இடத்துக்கு வருமாறுபணித்தார். ஆனால் அதை நிராகரித்த குப்புசாமி, திணேஷை தாறுமாறாக திட்டத் தொடங்கினார். மதுரை நகர போலீஸார் அனைவரும்தங்கள் வயர்லஸ்களில் இந்த கெட்ட வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தனர்.
மதுரை நகர கமிஷனர் சூர்ய பிரசாத்துக்கும் இந்தத் தகவல் போனது. மறுநாள் குப்புசாமியை அழைத்த அவர் அபின் மோதக்கிடம் மன்னிப்புகேட்க உத்தரவிட்டார். குப்புசாமியும் மன்னிப்பு கேட்டார்.
மேலும் இதுதொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டார் கமிஷ்னர். விசாரணை அறிக்கை மாநில உள்துறை செயலாளர் நரேஷ்குப்தாவிடம் சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் மற்றும் தலைமைச் செயாளருடன் விவாதித்த நரேஷ் குப்தா, குப்புசாமியைசஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications