அரசு ஊழியர்களுக்கு அடுத்த "அடி" ரெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதலில் சலுகைகள் குறைப்பு, பின்னர் கட்டாய வி.ஆர்.எஸ். திட்டம் என அடுத்தடுத்து அரசு ஊழியர்களைப் பயமுறுத்தி வரும்தமிழக அரசு இன்னும் ஒரு அணுகுண்டை அரசு ஊழியர்கள் மீது தூக்கிப் போட தயாராகி வருகிறது.

அரசு நிர்வாகத்தை திறம்பட நடத்தவும், வருவாயை அதிகரிக்கவும் சுவாமிநிாதன் கமிட்டியை அமைத்து அரசு ஆராய்ந்துவருகிறது. அந்தக் கமிட்டியின் பரிந்துரைகள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் கட்டாய ஓய்வுத்திட்டம் அறிவிக்கப்பட்டது. அதிகாரிகளின் கார்கள் வாபஸ் வாங்கப்பட்டன.

இந்தக் கமிட்டியின் அளித்துள்ள முக்கியமான பரிந்துரை ஓய்வு பெறும் வயதை 56 ஆக குறைப்பது. இந்தத் திட்டம் எபபோதும்அமலாகும் என்று தெரியவில்லை.

இந் நிலையில் அரசு ஊழியர்கள் மீது புதிதாக மும்முனைத் தாக்குதலுக்கு அரசு தயாராகி வருவதாக ஊழியர்களிடையேகிசுகிசுக்கப்படுகிறது.

இது குறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்:

ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு, கணவன், மனைவி அரசு ஊழியர்களாக இருந்தால் ஒருவருக்கு எச்.ஆர்.ஏ., சிசிஏ போன்றபடிகள் ரத்து, சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு எச்.ஆர்.ஏ ரத்து போன்ற புதிய திட்டங்களை அரசு நிறைவேற்றத்திட்டமிட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் டி.ஏ. ஆகியவற்றில் 10 சதவீதத்தைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத்தெரிகிறது. இதன் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

அடுத்து கணவனும், மனைவியும் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களில் ஒருவருடைய வீட்டு வாடகைப் படி மற்றும் நகரஈட்டுப் படி ஆகியவற்றை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

அதேபோல, ஒரு அரசு ஊழியர் சொந்த வீடு வைத்திருந்தால் அவருக்கு வழங்கப்பட்டு வரும் வீட்டு வாடகைப் படியை ரத்துசெய்யவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாம்.

இந்தத் திட்டங்கள் எந்த நேரத்திலும் அமலாகலாம் என்று அரசு ஊழியர்களிடையே பெரும் பீதி நிலவுகிறது.

குறி வைப்பது ஏன்?

அரசு ஊழியர்களை ஜெயலலிதா அரசு குறி வைத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசு ஊழியர்களிடையே ஒருகாரணம் கூறப்படுகிறது.

அரசு ஊழியர்கள் மட்டத்தில் அதிமுக ஆதரவு மிகவும் குறைவாக காணப்படுவதாக அரசுக்கு தகவல் சென்றுள்ளதாகவும், இதன்காரணமாகவே அரசு ஊழியர்களைப் பழி வாங்கும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுப்பாக அரசுஊழியர்கள் புலம்புகிறார்கள்.

ஏற்கனவே பல்வேறு சலுகைகளைப் பறித்து விட்ட காரணத்தினால் அரசு ஊழியர்கள் ஜெயலலிதா அரசு மீது கடும் கோபத்துடன்உள்ளனர். ஓய்வு பெறும் வயதைக் குறைக்கப் போவதாக ஏற்கனவே செய்திகள் பரவியுள்ளன. இந்த நிலையில் சம்பளத்தையும்குறைத்தால் அரசு ஊழியர்கள் பெரும் போராடடத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது.

இதை எதிர்பார்த்துத் தான் முதல் கட்டமாக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தடை செய்து சட்டம்நிறைவேற்றியுள்ளார் ஜெயலலிதா. ஆளுநர் ஒப்புதலும் கிடைத்துவிட்டதால் அது அமலுக்கும் வந்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+