பெண் உருவத்தில் முஷாரப்: ஜெ. குறித்து கருணாநிதி வர்ணனை
சென்னை:
தமிழகத்திலே பெண் உருவத்திலே ஒரு முஷாரப் (ஜெயலலிதா) தோன்றி இப்படி தேர்தல் நடத்தஆரம்பித்துவிட்டால், இது எங்கே போய் முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
திமுக பிரமுகரின் வீட்டு நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருணாநிதி பேசியதாவது:
சைதாப்பேட்டையில் கடந்த காலங்களில் இந்த அரசால் 17,000 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதைவிசாரிக்க வந்த தேர்தல் கமிஷன் அதிகாரிகள், ஆமாம் 5 மணிக்கு மேல் இந்த 17,000 போலி வாக்காளர்கள்சேர்க்கப்பட்டுள்ளர் என்று கூறி அதைச் செய்த அதிகாரிகளுக்கு தண்டனை தரச் சொல்லிவிட்டுச் செனறார்கள்.
இந்த அரசும் போலி வாக்காளர்கள் சேர்க்க உதவிய அந்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுத்து தண்டனைஅளித்தது. இப்போது தாசில்தார், கிராம அதிகாரிகளை வைத்து போலி சான்றிதழ் தந்து வாக்காளர்களைஉருவாக்கியிருக்கிறார்கள்.
அவரே தேர்தல் நடத்தி, அவரே ஓட்டும் போட்டுக் கொண்ட பாகிஸ்தான் சர்வாதிகாரி முஷாரப் போலதமிழகத்திலும் நடக்க ஆரம்பித்தால் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.
ரத்தத்தில் ஊறி வளர்ந்த மக்களாட்சித் தத்துவம், ஜனநாயகத் தத்துவம் நமக்கு இருக்கின்ற காரணத்தால் அதற்கு ஒருஊறு வரும்போது வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை.
ஆனால், இந்த அராஜகம் தொடர்ந்தால் நாடு காடாக மாறிவிடும். ஜனநாயகம் இல்லாமல் போய்விடும் என்றார்கருணாநிதி.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications