புலிகள் மீதான தடை நீக்கப்படும்: ரணில் உறுதி
கொழும்பு:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக்கு 10 நாட்கள்முன்னதாகவே புலிகளின் மீதான தடை நீக்கப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
சில இலங்கை தமிழ் எம்.பிக்களிடம் ரணில் இந்த உறுதியை அளித்துள்ளதாக அந்நாட்டிலிருந்து வெளியாகும்"டெய்லி நியூஸ்" என்ற பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இவ்வார இறுதியில் இந்தியாவுக்கு ஐந்து நாள் பயணமாகச் செல்லவுள்ள ரணில், அங்கிருந்து இலங்கைதிரும்பியவுடன் புலிகள் மீதான தடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் சனிக்கிழமை இந்தியாவுக்குச் செல்லும் ரணில், அந்நாட்டுப் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் மனைவியும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து இலங்கைஅமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகள் குறித்தும் புலிகள் மீதான தடை நீக்கம் குறித்தும் எடுத்துக் கூறவுள்ளார்.
புலிகளை இந்தியாவுக்குள்ளேயே அனுமதிக்கக் கூடாது என்றும் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளைபிரபாகரனைப் பிடிக்க இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறித் தீர்மானம்நிறைவேற்றியுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் ரணில் சந்திக்கவுள்ளார்.
இந்தியா ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புலிகளுக்குத் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய ஐந்து நாள் பயணத்தை முடித்து விட்டு ரணில் இலங்கை திரும்பியவுடனேயே புலிகள் மீதான தடைநீக்கப்படும் என்று அவருடைய அலுவலக வட்டாரங்கள் கூறின.
தங்கள் மீதான தடையை நீக்கினால் தான் பேச்சுவார்த்தைக்கே சம்மதிப்போம் என்று புலிகள் ஏற்கனவேகூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ் எம்.பிக்களிடமே ரணில் இத்தகைய உறுதியை அளித்திருப்பது பேச்சுவார்த்தைக்கானமுயற்சிகள் அனைத்தும் சுமூகமாகவே போய்க் கொண்டிருக்கின்றன என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
இடைக்கால அரசு:
இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தையின் போது வடக்கு இலங்கையில் இடைக்கால அரசு அமைப்பதுகுறித்தும் அதில் விடுதலைப்புலிகளின் பங்கு குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்படும் என்றும் ரணில் கூறியுள்ளார்.
நேற்று இரவு அவருடைய அலுவலக இல்லத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது ரணில் இவ்வாறு கூறியதாகவும்"டெய்லி நியூஸ்" பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத் துவக்கத்தில் தாய்லாந்தில் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும்இடையிலான பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமே இந்த இடைக்கால அரசு அமைக்கப்படுவது குறித்து தான்என்றும் ரணில் உறுதியாகக் கூறியதாக அப்பத்திரிக்கை தெரிவிக்கிறது.
தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு இலங்கையில் இடைக்கால அரசு அமைப்பது குறித்து ரணில் மிகவும்யோசித்து வருவதாகவும் அவர் அதில் பின் வாங்கி விட்டால் அமைதிப் பேச்சுவார்த்தையே பாதிக்கப்படலாம்என்றும் புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் நேற்று தான் கூறியிருந்தார்.
லண்டனிலிருந்து வெளியாகும் "தமிழ் கார்டியன்" பத்திரிக்கையில் பாலசிங்கம் இவ்வாறு பேட்டியளித்திருந்தார்.இந்தச் செய்தி வெளியான நேற்று இரவே இதற்குப் பதிலளிக்கும் விதமாக இடைக்கால அரசு அமைப்பது குறித்துதான் பேச்சுவார்த்தையில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று ரணில் கூறியுள்ளார்.
புலிகளுக்கு அதிகமான இடம் தந்து விடக் கூடாது என்றும் இடைக்கால அரசு அமைப்பது குறித்தெல்லாம் பேசக்கூடாது என்றும் இலங்கை அதிபரான சந்திரிகா குமாரதுங்கா தொடர்ந்து வற்புறுத்தி வருவதால் இடைக்கால அரசுமுயற்சியிலிருந்து ரணில் பின் வாங்கலாம் என்ற எண்ணத்தில் தான் பாலசிங்கம் அவ்வாறு கூறியிருந்தார்.
இந்நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தையின் போது இடைக்கால அரசு அமைப்பது குறித்து தான் முக்கியமாகப்பேசப்படும் என்று ரணில் கூறியிருப்பது புலிகளுக்கு மட்டுமல்லாமல் தமிழர்கள் அனைவருக்குமே ஏற்பட்டிருந்தஒரு சந்தேகத்தைத் தவிர்த்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications