இப்போது நடுவிரலில் மை
சென்னை:
கடந்த 31ம் தேதி நடந்த தேர்தலில் ஆள்காட்டி விரவில் வாக்காளர்களுக்கு அடையாள மை இடப்பட்டது. அந்தமை இன்னும் அழியவில்லை. இதனால், இப்போது நடு விரலில் அடையாள மை இடப்பட்டு வருகிறது.
தாசில்தார் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி வாக்குச் சாவடியின் வாயிலில் நின்று கொண்டு வாக்காளர்களின்அடையாள அட்டைகளை பரிசோதித்த பின்னர் உள்ளே அனுப்பி வருகிறார். ஜாதிச் சான்றிதழைக் காட்டி ஓட்டுபோட வருபவர்கள் அதிகாரிகளால் திரும்பி விரட்டி விடப்பட்டு வருகின்றனர்.
பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதால் உள்ளேபோக முடியாமல் வெளியில் நின்று கொண்டுள்ளனர்.
ஓட்டு இருந்தால் தவிர அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அரசியல்வாதிகள், மேயர், துணை மேயர்,கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அரசுப்பதவியில் இருப்பவர்களும் உள்ளே நுழையக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications