சாட்டிலைட்கள் மூலம் பாகிஸ்தானை கண்காணிக்கும் இந்தியா
பெங்களூர்:
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்பாட்டை இந்தியா இந்தியா தனது செயற்கைக் கோள்கள்மூலம் கண்காணித்து வருவதாகத் தெரிகிறது.
ரிமோட் சென்சிங் சாட்டிலைட் (ஐ.ஆர்.எஸ்.) என்றழைக்கப்படும் தொலையுணர்வு செயற்கைக் கோள்களைஇந்தியா தொடர்ந்து விண்ணில் ஏவி வந்துள்ளது. இப்போதும் சில ஐ.ஆர்.எஸ். செயற்கைக் கோள்கள் விண்ணில்சுற்றி வருகின்றன. இவை தான் இப்போது இந்திய காலநிலை, வானிலை குறித்த தகவல்களைத் தந்து வருகின்றன.
இது தவிர கடந்த அக்டோபரில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமாக டி.ஈ.எஸ். (Technology Experiment Satellite) என்றஅதிக திறன் கொண்ட செயற்கைக் கோள் ஏவப்பட்டது. அப்போதே இது ராணுவத்திற்காகத் தான் ஏவப்படுவதாகக்கூறப்பட்டது. இந்தச் செயற்கைக் கோளால் பூமியில் 1 மீட்டர் உயரமுள்ள எந்தப் பொருளையும் தெளிவாகக்கண்டுபிடித்துவிட முடியும்.
இப்போது எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் இந்த செயற்கைக் கோள் முழு அளவில்பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர்கஸ்தூரிரங்கனும் உறுதி செய்துள்ளார்.
பாகிஸ்தானின் டாங்கிகள், வாகனங்கள், கவச வாகனங்கள் நகர்வதை இந்தச் செயற்கைக் கோள் படம் பிடித்துஅனுப்பிய வண்ணம் உள்ளது.
பாகிஸ்தானுக்கு இன்னொரு பாடம்:
எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினரும் சேர்ந்தே கண்காணிப்பில் ஈடுபடலாம் என இந்தியப் பிரதமர் வாஜ்பாய்கூறிய யோசனையை பாகிஸ்தான் நிராகரித்துவிட்டது.
இதனால் பாகிஸ்தானுடன் இணைந்து எல்லையைக் கண்காணிக்கும் திட்டமே எங்களிடம் இல்லை என இந்தியாஇப்போது கூறியுள்ளது. பிரதமர் அப்படிக் கூறவே இல்லை என பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ் மறுத்தார்.எங்கள் எல்லையை நாங்கள் பார்த்துக் கொள்வோம், இதில் யாருடைய உதவியும் தேவையில்லை என்றார்.
இதன்மூலம் பாகிஸ்தானை அதன் வழியிலேயே இந்தியாவும் நடத்த ஆரம்பித்துள்ளது.
ஏர்-பிரான்ஸ் விமானம் ரத்து:
இந்திய-பாகிஸ்தான் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் பிரான்ஸ் தனது டெல்லி விமான சேவையில் பலமாற்றஙகளைக் கொண்டு வந்துள்ளது.
இனி மேல் டெல்லிக்கு வரும் பிரான்ஸ் விமானங்கள் இரவில் டெல்லியில் இருக்காது எனவும் கூறியுள்ளது. அவைதுபாயில் இனி நின்று தான் இந்தியா வரும். அதே போல இரவில் அவை துபாய் திரும்பிவிடும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களை அமல்படுத்துவதற்காக இன்றைய ஏர்-பிரான்ஸ் டெல்லி விமானம் ரத்து செயயப்பட்டுவிட்டது.
தலை, கையை வெட்டி தீவிரவாதிகள் வெறி:
இந் நிலையில் காஷ்மீரில் ஒரு வாலிபரைக் கடத்திச் சென்ற தீவிரவாதிகள் அவரது தலையையும் கையையும்வெட்டி சித்திரவதை செய்து கொன்றனர்.
தோடா மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மத் யூசுப் என்ற அந்த வாலிபர் கடந்த 3ம் தேதி கடத்திச் செல்லப்பட்டார்.அவரது தலையும் ஒரு கையும் இன்று ஒரு சாக்குப் பையில் கிடந்தன.
தீவிரவாத இயக்கத்தில் சேர மறுத்ததால் அல்லது தீவிரவாதிகளுக்கு உதவி செய்ய மறுத்ததால் அவர்கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications
