புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எரித்து வீசிய தந்தை
மதுரை:
புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்து அதை பாதி எரித்து பஸ்சில் போட்டுவிட்டுச் சென்ற தந்தையை போலீசார் தேடிவருகின்றனர்.
மதுரை அருகே உள்ள திருமங்கலத்தைச் சேர்ந்த அந்த நபரின் மனைவிக்கு 10 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பெண்குழந்தை என்பதால் அதை சரியாக கவனிக்கவில்லை. இதனால் குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதையடுத்துமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அந்தக் குழந்தை புதன்கிழமை இறந்தது. மருத்துவமனையிலிருந்து உடலை எடுத்து வந்த பின் அந்தக்குழந்தையின் உடலை திருமங்கலத்தில் எரிக்க தந்தை எதிர்ப்பு தெரிவித்தார்.
தனது சொந்த ஊரான நெடுங்குளத்தில்தான் எரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால் அவரது மனைவி அதை ஏற்கவில்லை, தனது சொந்த ஊரான திருமங்கலத்தில்தான் புதைக்க வேண்டும் என்று கூறினார். எரிக்கக்கூடாது என்று கூறினார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த நபர், தனது மனைவியின் கழுத்தில் இருந்த சங்கிலியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்துசென்றுவிட்டார். அவர் போன பின் திருமங்கலத்தில் வைத்து குழந்தையின் உடல் புதைக்கப்பட்டது.
இதைக் கேள்விப்பட்ட அந்தத் தந்தை ஆத்திரமடைந்து இரவில் சுடுகாட்டுக்கு போனார். அங்கு புதைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையின்பிணத்தை மீண்டும் தோண்டியெடுத்த அவர் தீவைத்து எரித்தார்.
பாதி எரிந்த நிலையில் இருந்த அந்த சிசுவின் உடலை திருமங்கலம் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நெடுங்குளம் செல்லும் பஸ்சில்போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். நேற்று காலை பஸ்சை சுத்தம் செய்ய வந்தவர்கள் பாதி நிலையில் எரிந்து கிடந்த குழந்தையின் உடலைப்பார்த்து அதிர்ந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications