12ம் தேதி வாஜ்பாயை சந்திக்கிறார் ஜெ.
டெல்லி:
பிரதமர் வாஜ்பாயை தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் 12ம் தேதி சந்திக்கவுள்ளார்.
கடந்த ஏப்ரல் இறுதியிலேயே வாஜ்பாயைச் சந்திக்க ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில்ஜெயலலிதாவின் டெல்லி பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் வரும் 12ம் தேதி ஜெயலலிதா டெல்லி செல்லவுள்ளார். அன்று மாலை 3.30 மணிக்கு திட்டக் கமிஷன்துணைத் தலைவரைச் சந்தித்து தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய ஆண்டு திட்ட ஒதுக்கீடு குறித்து விவாதிப்பார்.
அதன் பிறகு அன்று மாலை 6 மணிக்கு வாஜ்பாயை அவருடைய வீட்டில் வைத்து ஜெயலலிதா சந்திக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே உரசல் போக்கு துவங்கியதிலிருந்தே அதிமுக படிப்படியாகபாஜக பக்கம் சாய்ந்து கொண்டு வந்தது.
அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கூட்டணி ஏற்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும்அக்கட்சிகளின் நடவடிக்கைகள் விரைவில் கூட்டணி இருக்கும் என்பதையே காட்டிக் கொண்டிருந்தன.
இந்நிலையில் சமீபத்தில் தமிழக பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையே மோதல் முற்றியது. வெறும் நட்பு மட்டும்தான் என்று கூறி இரு கட்சிகளுமே பரஸ்பரம் கூட்டணியை முறித்துக் கொண்டன.
இதையடுத்து அதிமுகவும் பாஜகவும் எப்போது வேண்டுமானாலும் கூட்டணி அமைத்துக் கொள்ளும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. தமிழகக் கோவில்களில் ஜெயலலிதா தொடங்கிய அன்னதானத் திட்டத்தை தமிழக பாஜகஅமோகமாக வரவேற்றதோடு மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சிகளிலும் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.இது திமுகவினரிடையே பெரிதும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனாலும் மத்தியில் பாஜக தலைமையிலான உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மட்டும் திமுக தொடர்ந்துஇருந்து வருகிறது. இடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர் முரசொலி மாறன்டெல்லியின் சந்தித்துப் பேசியதாகக் கசிந்த தகவல்களையடுத்து காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைக்கும் என்றுகூறப்பட்டது.
ஆனால் ரகசியச் சந்திப்பு அம்பலமானதாலோ என்னவோ அது பற்றிய பேச்சுக்கள் அப்படியே அமுங்கியுள்ளன.பாஜக-அதிமுக கூட்டணி குறித்தும் தற்போது அடக்கி வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் வரும் 12ம் தேதி வாஜ்பாயை ஜெயலலிதா சந்திக்கவுள்ளார் என்பது மீண்டும் கூட்டணி குறித்தஎதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமாகவே இருக்கும் என்றுபிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறின.
கடந்த மார்ச் 2ம் தேதி தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்ற பிறகு வரும் 12ம் தேதி தான் முதல்முறையாக அவர் டெல்லி சென்று வாஜ்பாயைச் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications