இந்தியா மீது பறக்க பாக். விமானங்களுக்கு தடை நீக்கம்
டெல்லி:
பாகிஸ்தானின் பயணிகள் விமானங்கள் இந்தியாவின் மீது பறக்க விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கப்பட்டப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதை நிரந்தரமாகத் தடுப்பதாக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ்முஷாரப் உத்தரவாதம் தந்ததையடுத்து எல்லைப் பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் இந்தியாஈடுபட்டுள்ளது.
தீவிரவாதிகள் விஷயத்தில் முஷாரப் தனது நிலையை மாற்றிக் கொண்டால் நாங்களும் இறங்கி வருவோம் எனஅமெரிக்காவிடம் இந்தியா உறுதிமொழி தந்திருந்தது.
இதன்படி இப்போது இந்திய வான் பரப்பில் பறக்க பாகிஸ்தான் விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையைமத்திய அரசு நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கியதையடுத்துஇந்தத் தடையை இந்தியா விதித்தது.
இதற்கு மேல் இப்போதைக்கு இந்தியா இறங்கி வராது என்று தெரிகிறது. தீவிரவாதிகள விஷயத்தில் முஷாரப்நடந்து கொள்வதை வைத்துத் தான் ராணுவத்தை எல்லையில் இருந்து வாபஸ் வாங்குவோம் என்றும் இந்தியாதெளிவுபடுத்திவிட்டது.












Click it and Unblock the Notifications