எல்லையில் பீரங்கி சண்டை தொடர்கிறது
ஜம்மூ:
கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் அப்பால் இருந்து பாகிஸ்தான் படைகள் நடத்திய கடும் பீரங்கித் தாக்குதலில்இந்திய வீரர் உயிரிழந்தார்.
இன்று 24வது நாளாக பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து இந்திய கிராமங்களை நோக்கி பீரங்கித் தாக்குதல்நடத்தின.
காலை 9.30 மணியில் இருந்து பூஞ்ச் பகுதி மீது தொடர்ந்து பீரங்கி குண்டுகள் வந்து விழுந்தவண்ணம் இருந்தன.இந்தப் பகுதியில் உயரமான மலைப் பகுதிகள் பாகிஸ்தான் தரப்பில் உள்ளன.
பள்ளத் தாக்குகள் தான் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால் இந்திய கிராமங்கள், ராணுவத்தினர் மீதுதாக்குதல் நடத்துவது பாகிஸ்தானுக்கு எளிதாக இருந்து வருகிறது.
இந்த மோசமான சூழ்நிலையிலும் இந்தியப் படைகள் தொடர்ந்து பதிலடித் தாக்குதல் நடந்து வருகிறது.
சுந்தேர்பனி பகுதியில் ஒரு பீரங்கிக் குண்டு நேராக இந்திய ராணுவத்தினர் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இதில்ஒரு வீரர் இறந்தார். அருகில் இருந்த கிராமவாசி படுகாயமடைந்தார்.
2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
ஜம்மூவில் தீவிரவாதிகள் மறைந்திருந்த வீட்டை ராணுவத்தினர் சுற்றி வளைத்துத் தாக்கினர். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே பலத்த துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் 2 தீவரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வீட்டை ராணுவத்தினர் சோதனையிட்டபோது 25 கிலோஆர்.டி.எக்ஸ் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர்.
இந்த இரு தீவிரவாதிகளும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள். இவர்களின் ஒருவன் பாகிஸ்தானின்குயேட்டா நகரைச் சேர்ந்த இஷார் அகமத் கான், இன்னொருவன் அந் நாட்டின் தோத்தாரியாவைச் சேர்ந்த குலாம்ஹசன். இவர்களிடம் இருந்து ஏ.கே.-47 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.
1,500 தீவிரவாதிகள்:
இதற்கிடையே காஷ்மீருக்குள் ஏற்கனவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் 1,500 பேர் ஊடுருவியுள்ளதாகக்கூறப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இவர்கள் இந்தியப் படைகளை பின்னால் இருந்துதாக்க வசதியாக இவர்களை பாகிஸ்தான் ஏற்கனவே காஷ்மீருக்குள் அனுப்பிவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் எல்லைப்பகுதிக்கு சென்றுவிட்டனர். இதனால், காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ராணுவத்தின் ரிசர்வ் படையினரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பில் மத்திய அரசுஈடுபடுத்தியுள்ளது.
இது தவிர பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள்இந்தியாவுக்குள் நுழைய காத்துக் கொண்டிருக்கின்றர் என்றும் இந்திய ராணுவம் கூறியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications