செல்வாக்கு இழந்த பொன்னையன்
சென்னை:
தமிழக நிதியமைச்சர் பொன்னையன் வைத்திருந்த கூடுதல் இலாகாவான தகவல் தொழில்நுட்ப இலாகா அவரிடமிருந்து பறிக்கப்பட்டுஅமைச்சர் ஜெயக்குமாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றிய கையோடு சில அமைச்சர்களின் இலாகாக்களையும் மாற்றியுள்ளார் ஜெயலலிதா. நிதியமைச்சர்பொன்னையன் வசம் இருந்த தகவல் தொழில்நுட்ப இலாகா அவரிடமிருந்து பறிக்கப்பட்டு அமைச்சர் ஜெயக்குமாரிடம்கொடுக்கப்பட்டுள்ளது.
மூத்த அமைச்சர் பொன்னையனிடமிருந்த இலாகாவை ஜெயலலிதா பறித்துள்ள அமைச்சர்களிடையே பெரும் கலக்கத்தைஏற்படுத்தியுள்ளது. இடைத் தேர்தல் வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை என்ற கோபம் தவிர பொன்னையன் மீது மேலும் சிலவிஷயங்களில் ஜெயலலிதா காட்டமாகவே இருந்து வந்தார்.
ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவுடன் புதிய தல்வர் குறித்த பேச்சு எழுந்தது. அப்போது பொன்னையன் பெயரும்அடிபட்டது. ஆனால் பொன்னையன் பெயர் தானாக எழவில்லை, அவரே கிளப்பி விட்டுள்ளதாக பின்னர் ஜெயலலிதாவுக்குத் தெரியவந்தது.
அப்போது முதலே பொன்னையன் மீது லேசான அதிருப்தியில் இருந்து வந்தார் ஜெயலலிதா.
பின்னர் பன்னீர்செல்வம் முதலாவராக இருந்தபோது பொன்னையன் எல்லா விஷயங்களிலும் தலையிட்டார். இது சசிகலாவுக்கு எரிச்சலைத்தந்தது.
இந் நிலையில் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் பொன்னையன் மற்றும் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஜெயலலிதாபெரும் அதிருப்தியடைந்தார். தேர்தல் வேலைகளில் பன்னீர் செல்வம் மற்றும் தினகரனுடன் சேர்ந்து செயல்படுமாறு அனைத்துஅமைச்சர்களுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், பொன்னையன் பன்னீருடன் இணைந்து செயல்படாமல் தனித்தே செயல்பட்டார். இதனால் தான் அவருக்கு ஆப்புவைக்கப்பட்டுள்ளது. இபபோது பொன்னையன் வசம் இருப்பது நிதி மற்றும் சில சிறிய இலாகக்களே.
அதே நேரத்தில் பல்வேறு வழக்குகளில் இருந்து ஜெயலலிதா தப்புவற்கு பேருதவி புரிந்தார் எம்.ஜி.ஆர். காலத்தில்சட்ட அமைச்சராக பொன்னையன். அப்போது பொன்னையன் நியமித்த பல மாஜிஸ்திரேட்டுகள் தான் இப்போது நீதித்துயிைனஉயர்ந்த பதவிகளில் உள்ளனர். இதனால் பொன்னையனை ஒரேயடியாக தூக்கி எறியவில்லை ஜெயலலிதா.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications