நக்கீரன் நிருபரை சித்திரவதை செய்யும் தமிழக போலீஸ்
சென்னை:
நக்கீரன் நிருபர் சிவ சுப்பிரமணியத்தை போலீசார் சித்திரவதை செய்து வருவதைத் தடுக்கவும் அவர் மீதான போலிவழக்குகளை வாபஸ் பெறச் செய்யவும் தமிழக பத்திரிக்கை நிருபர்கள் கோரியுள்ளனர்.
இது தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர்களான என்.ராம், பாலசுப்பிரமணியம், வாஸந்தி, சிகாமணி, சம்பத் ராஜ்ஆகியோர் நேற்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துப் பேசினர்.
இத் தகவலை பிரண்ட் லைன் பத்திரிக்கையின் ஆசிரியர் என்.ராம் இன்று தெரிவித்தார். அவர் கூறுகையில், சிவசுப்பிரமணியத்துக்கும் வீரப்பன் கும்பலுக்கும் தொடர்பிருப்பதாக தமிழக போலீசார் கூறி வருவது குறுத்து உண்மைஅறியும் குழு விசாரணை நடத்தியது. இதில் போலீசாரின் வழக்கு பொய்யானது என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் மீது அடுத்தடுத்து ஏதாவது ஒரு வழக்கை போலீசார் ஜோடித்து வருகின்றனர். இது பத்திரிக்கைசுதந்திரத்தை குழி தோண்டி புதைத்து வருகிறது.
இது தவிர போலீஸ் காவலில் சிவசுப்பிரமணியம் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார். இது மிக அராகஜமானது.
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதையடுத்து அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர்கிருஷ்ணாவும் தான் நக்கீரன் ஆசிரியர் கோபாலையும் நிருபர் சிவசுப்பிரமணியத்தையும் காட்டுக்குச் செல்லவலியுறுத்தினர்.
அவர் முதலில் போக மறுத்துவிட்டார். அவரை கெஞ்சி, கூத்தாடி அனுப்பினர். ஆனால், இப்போது அதிமுகஆட்சிக்கு வந்தவுடன் கருணாநிதி செய்தார் என்பதற்காக அதை எதிர்த்தும், அரசுக்கு உதவிய கோபலையும்சிவசுப்பிரமணியத்தையும் கொடுமைப்படுத்தி வருவது கொடுமையான விஷயம்.
இதை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு நேற்று தமிழக பத்திரிக்கையாளர்கள் குழு கர்நாடக முதல்வரை சந்தித்துவலியுறுத்தியது. பத்திரிக்கையாளர்களே நடத்திய விசாரணையில் அவர்கள் மீது தமிழக போலீசார் கூறும் புகார்கள்தவறு என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையும் கிருஷ்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் பத்திரிக்கையாளர்களின் செயலைப்பாராட்டினார். சிவ சுப்பிரமணியமும் கோபாலும் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் கூறினார்.
இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உதவுவதாகவும் கிருஷ்ணா உறுதியளித்தார். இதே போல தமிழகமுதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்து இது குறித்து பேசப்படும் என்றார் என்.ராம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications