துணை ஜனாதிபதி பதவியைப் பிடிக்க பா.ஜ.க. தீவிரம்
டெல்லி:
ஜனாதிபதி தேர்தலில் பல குழப்பங்களுக்கு மத்தியில் அப்துல்கலாமின் பெயரை அறிவித்த பா.ஜ.க., துணைஜனாதிபதியாக தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த தீவிரமாக முயன்று வருகிறது.
ஆனால், அப்துல் கலாமை தேசிய ஜனநாயக முன்னணி நிறுத்தியதால் துணை ஜனாதிபதிக்கான வேட்பாளரைநாங்கள் தான் முடிவு செய்வோம் என காங்கிரஸ் கூறியுள்ளது.
துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்டில் நடக்கிறது.
இது குறித்து பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளரான மல்ஹோத்ரா கூறுகையில்,
ஜனாதிபதி பதவிக்கு எங்கள் கட்சியைச் சேர்ந்தவரை நிறுத்த முடியவில்லை, நாடாளுமன்ற சபாநாயகர் பதவியும்எங்களுக்குக் கிடைக்கவில்லை, மேலும் பல முக்கிய பதவிகள் பிற கட்சிகள் வசம் தான் உள்ளன. இதனால், துணைஜனாதிபதி பதவியாவது எங்கள் கட்சிக்கு தரப்பட வேண்டும் என்றார்.
ஆனால், சபாநாயகர் பதவியை தங்கள் கூட்டாளியான சிவசேனைக்குக் கொடுத்துவிட்டு எங்களுக்கு ஒன்றும்கிடைக்கவில்லை என பா.ஜ.க. புலம்புவது மக்களை ஏமாற்றும் செயல் என காங்கிரஸ் கூறியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி கூறுகையில்,
அப்துல் கலாமை நிறுத்தும்போது எங்களை பா.ஜ.க. கலந்து ஆலோசிக்கவில்லை. இருந்தாலும் நாட்டின் நலனைக்கருத்தில் கொண்டு அப்துல் கலாமை நாங்கள் ஆதரித்தோம். ஆனால், துணை ஜனாதிபதி தேர்தலிலும் பா.ஜ.கவும்தேசிய ஜனநாயக முன்னணியும் எங்களுடன் பேசாமல் அராஜக்ததுடன் நடந்து கொண்டால், நிச்சயம் நாங்கள்அதை எதிர்த்து எங்கள் வேட்பாளாரை நிறுத்துவோம் என்றார்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகுக்கும் தேசிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே வாக்கு வித்தியாசம் வெறும்5 சதவீதம் தான் உள்ளது. இதனால் காங்கிரஸ் போட்டியாளரை நிறுத்தி குட்டிக் கட்சிகளை வளைத்துவிட்டால்அந்தக் கட்சியின் வேட்பாளரால் பா.ஜ.கவுக்கு கடும் போட்டியைத் தர முடியும்.
பா.ஜ.க. தனது முக்கியத் தலைவரான பைரோன்சிங் செகாவத்தை துணை ஜனாதிபதியாக்க திட்டமிட்டுள்ளது.ராஜஸ்தானின் முன்னாள் முதல்வராக இருந்தவர் செகாவத்.
காங்கிரஸ் தனது வேட்பாளராக நஜ்மா ஹெப்துல்லாவை நிறுத்தத் திட்டமிட்டது. ஆனால், அப்துல் கலாமும்முஸ்லீம், துணை ஜனாதிபதியும் முஸ்லீமா என்ற கேள்வி எழும் என்பதால் வேறு ஒரு வேட்பாளரை நிறுத்தகாங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஆனால், இவர்கள் இடையில் புகுந்து கிருஷ்ணகாந்தை தொடர்ந்து துணை ஜனாதியாக இருக்கச் செய்யலாம் என்றுதெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கோரவும் வாய்ப்புள்ளது. அவர் காங்கிரசுடன் சேர்ந்தால்கிருஷ்ணகாந்தை மீண்டும் தேர்வு செய்துவிட முடியும்.
ஜனாதிபதி தேர்தலைவிட துணை ஜனாதிபதி தேர்தலில தான் பெரும் அரசியல் மோதல்கள் நடக்கும் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications