ஜனாதிபதி பதவிக்கு அரசியல் அனுபவம் தேவையில்லை: கருணாநிதி
சென்னை:
ஜனாதிபதி பதவிக்கு வருபவர்களுக்கு அரசியல் அனுபவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அப்துல் கலாமுக்கு அரசியல் அனுபவமில்லை என்று இடதுசாரிக் கட்சிகள் கூறியிருப்பதற்கு கருணாநிதி எதிர்ப்புதெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த அரசியல் அனுபவம் இருந்த ஒரு ஜனாதிபதி (ஆர்.வெங்கட்ராமன்) தான் ஆளுநர் எதிர்ப்பையும் மீறிதிமுக ஆட்சியை தேவையில்லாமல் கலைத்தார். எனவே, அரசியல் அனுபவம் வேண்டும் என்ற வாதத்தை ஏற்கமுடியாது என கருணநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசியல் அனுபவம் இல்லாதவர்களும் மிகச் சிறந்த இந்திய ஜனாதிபதிகளாக செயல்பட்டுக் காட்டியிருக்கிறார்கள்.ஜாகீர் உசேன் ஜனாதிபதியாக இருந்தார். அவர் ஒரு கல்வியாளர் தான், அரசியல்வாதி இல்லை. ஆனால், மிகச்சிறந்த ஜனாதிபதியாக இருந்தார்.
அதே போல டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஒரு தத்துவ ஞானி. மிகச் சிறந்த அறிவாளியாகவும்ஜனாதிபதியாகவும் செயல்பட்டுக் காட்டினார்.
அதே நேரத்தில் 1991ம் ஆண்டு ஒரு ஜனாதிபதி (ஆர்.வெங்கட்ராமன்) இருந்தார். மிகவும் ஆழ்ந்த அரசியல்ஞானம் உடையவர் தான். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியாக இல்லை என்று கூறி திமுக ஆட்சியை கலைத்துஜனநாயகப் படுகொலை செய்தார். அப்போதைய ஆளுநர் (சுர்ஜித் சிங் பர்னாலா) தமிழக சட்டம்- ஒழுங்கு சரியாகஉள்ளதை சுட்டிக் காட்டி அறிக்கை அனுப்பியும் திமுக ஆட்சியைக் கலைத்தார் அப்போதைய ஜனாதிபதி.
இதனால் அரசியல் அனுபவத்துக்கும் செயல்பாட்டும் சம்பந்தமில்லை. டாக்டர் கலாம் ஒரு மிகச் சிறந்த விஞ்ஞானி.அவரால் நல்ல ஜனாதிபதியாகவும் இருக்க முடியும்.
இடதுசாரிக் கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கேப்டன் லட்சுமி செகலும் மிகச் சிறந்த பெண்மணி தான்.ஜனாதிபதியாவதற்கு அவருக்கு முழுத் தகுதி உள்ளது. ஆனால், நாட்டின் இன்றைய தேவை, அப்துல் கலாம்போன்ற ஒருவர் தான்.
எனவே அவரை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க இடதுசாரிகள் முன் வந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications