திருவண்ணாமலை கும்பாபிஷேக விழா: இன்று தொடக்கம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. வரும் 27ம் தேதிகும்பாபிஷேகம் நடக்கிறது.
திருவண்ணாமலையில் உள்ள புகழ் மிக்க அருணாச்சலேஸ்வரர் உடனுறை உண்ணாலையம்மன் கோவிலில் பல ஆண்டுகளுக்குப் பிறகுவரும் 27 தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதற்கான திருப்பணிகள் பல கோடி செலவில் நடந்து வந்தன. பணிகள் அனைத்தும் முடிந்து இன்று முதல் கும்பாபிஷேக விழாதொடங்குகிறது.
இன்று மாலை 6 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா தொடங்குகிறது. அதன் பிறகு தினசரி பூஜைகள் நடைபெறவுள்ளன. 22ம் தேதி யாகசாலை பூஜை நடக்கிறது.
27ம் தேதி காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 10.15 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 4மணிக்கு மகா அபிஷேகம், 8.30 மணிக்கு திருக்கல்யாணம், 10 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.
இதையொட்டி வரும் 27ம் தேதி திருவண்ணாமலையில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அடுத்த மாதம் 6ம் தேதிஅரசு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் சுமார் 30 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேக விழாவில் தமிழக தல்வர் ஜெயலலிதாகலந்து கொள்கிறார்.
கும்பாபிஷேகத்தையடுத்து திருவண்ணாமலை முழுவதிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications