காவிரி: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு
சென்னை:
காவிரி நதி நீர் ஆணையத்தால் எந்தவிதமான பயனும் இல்லாததால் அந்த அமைப்பை இனிமேல் புறக்கணித்துவிடதமிழகம் முடிவு செய்துள்ளது.
அதே போல காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி தமிழகத்துக்கு உரிய நீரை வழங்குமாறுகர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் தமிழகம் முடிவெடுத்துள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை வழங்க கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இது தொடர்பாக காவிரிநடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்பையும் கர்நாடகம் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
இதனால் காவிரிப் பாசன விவசாயிகளின் வாழ்க்கையோடு கர்நாடகம் விளையாடி வருகிறது. குறுவைப் பயிரைபயிரிட்டுவிட்டு காவிரியில் வைத்த கண் வாங்காமல் 15 லட்சம் தமிழக விவசாயிகள் உட்கார்ந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் கர்நாடகம் தமிழத்துக்கு உரிய நீரை தர மறுத்து வருகிறது.இதனால் பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.
இதையடுத்து இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்நடந்தது. அதில் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மேட்டூர் அணையின் நீர் மட்டம், காவிரி டெல்டாவுக்கு தேவைப்படும் நீரின் அளவு, இப்போது விவசாயிகள்சந்தித்து வரும் பிரச்சனைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இனிமேல் கர்நாடகத்திடம் பேசிப் பயன் இல்லை என்று இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்தவிவகாரத்தில் தமிழகத்துக்கு நியாயத்தைப் பெற்றுத் தர முடியாத அதிகாரமில்லாத அமைப்பாக காவிரி நதி நீர்ஆணையம் இருப்பதால் அந்த அமைப்பிலிருந்து விலகி விடவும் முடிவு செய்யப்பட்டது.
இனி இந்த அமைப்பு நடத்தும் கூட்டங்களை தமிழகம் புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. காவிரிநடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த முடியாமல் இந்த ஆணையம் திணறி வருகிறது. இதனால், இந்தஆணையத்தை இனியும் தமிழகம் நம்பத் தயாராக இல்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு:
தமிழகத்துக்கு நீர் விடக் கோரி காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவையும், அந்த மன்றம்பிறப்பிக்கப் போகும் இறுதி ஆணையையும் முறையாக அமல்படுத்தக் கோரி கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரிஉச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
காவிரி விஷயத்தில் தமிழகம் தந்துள்ள புதிய வரைமுறைகளை அமலாக்குமாறு நடுவர் மன்றத்துக்கு மத்திய அரசுஉத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தை வலியுத்த தமிழகம் முடிவு செய்துள்ளது.
இந்த அமைச்சரவைக் கூட்டம் முடிந்தவுடன் வெளியே 2 மணி நேரமாகக் காத்திருந்த நிருபர்களை சந்திக்கமறுத்துவிட்டார்.
மாலையில் தான் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications