காவிரி ஆணையத்தை உடனே கூட்ட பிரதமருக்கு ஜெ. கடிதம்
தஞ்சாவூர்:
காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தை உடனே கூட்டுமாறு பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்எழுதியுள்ளார்.
காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கு நீரை விட கர்நாடகம் மறுத்து வருகிறது. இந்த நீரை நம்பி குறுவை நெல்லைபயிரிட்டுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயிர் நீர் இல்லாமல் கருக ஆரம்பித்துவிட்டதால் தஞ்சாவூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட காவிரி டெல்டாமாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15 லட்சம் விவசாயிகள் கண்ணீருடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இந் நிலையில் பிரதமர் வாஜ்பாய்க்கு இது தொடர்பாக ஜெயலலிதா கடிதம் எழுதியிருப்பதாக விவசாயத்துறைஅமைச்சர் ஜீவானந்தம் கூறியுள்ளார்.
காவிர் நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவுப் படி தமிழகத்துக்குத் தர வேண்டிய பங்கை கர்நாடகம் மறுத்துவருகிறது. இது தொடர்பாக விவாதிக்க உடனடியாக காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாகக்கூட்ட வேண்டும் என அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருப்பதாக அமைச்சர்ஜீவானந்தம் கூறினார்.
தஞ்சாவூரில் நிருபர்களிடம் பேசிய அவர், காவிரிப் படுகை விவசாயிகளின் நிலையை முதல்வர் தொடர்ந்துகண்காணித்து வருவதாகவும் தமிழகத்துக்கு உரிய நீரை அவர் நிச்சயம் பெற்றுத் தருவார் என்றார்.
தஞ்சை வரும் ஜெயலலிதா:
இதற்கிடையே வரும் 24ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தஞ்சாவூர் வர உள்ளார்.
சலங்கைநாதம் என்ற நாட்டுபுற நாட்டியக் கலைவிழாவில் கலந்து கொள்ள அவர் தஞசை வருகிறார். அவருடன்ஆளுநர் ராம் மோகன் ராவும் வருகிறார்.
தென் மண்டல கலாச்சார மையத்தின் புதிய கட்டடத்தையும் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்.
இந் நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி, கர்நாடகம், ஆந்திர மாநில கலாச்சாரத்துறை அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
10 நாட்கள் நடக்கும் இந்தக் கலை விழாவில் 15 மாநிலங்களைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்றுநடன நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர். மேலும் நாட்டுப்புற ஓவியப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும்நடக்கவுள்ளன.
ஜெவுக்கு கருப்புக் கொடி:
இந் நிலையில் காவிரியில் நீர் வாங்கித் தராத முதல்வர் ஜெயலலிதா தஞ்சாவூருக்கு வரும்போது அவருக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தபல்வேறு விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications