இவர்கள் பதவி பகாசுரர்கள்: ஜெ. கடும் தாக்கு
திருப்பூர்:
சிலர் (கருணாநிதி) பதவிக்காக பரிதவித்துக் கொண்டுள்ளனர். நனவிலும் பதவி, கனவிலும் பதவி என்று பதவிப்பித்தர்களாக வாழ்ந்து வருகின்றனர் என்று முதல்வரும் அதிமுக பொதுச் செயலாருமான ஜெயலலிதா கூறினார்.
திருப்பூரில் மக்கள் நலத் திட்டங்களைத் துவக்கி வைத்து பேசிய அவர் கூறியதாவது:
அவர்களுக்கு மக்களைப் பற்றிய சிந்தனை உண்டா? உண்டு, தங்கள் மக்களின் (முரசொலி மாறன், ஸ்டாலின்)சிந்தனை தான் உண்டு.
அவர்களுக்கு மக்கள் பிரச்சனையில் அக்கறை உள்ளதா? உள்ளது, தங்கள் மக்கள் பிரச்சனையில் தான் அக்கறைஉள்ளது.
பிறர்க்கு உதவுவது அவர்கள் லட்சியம் அல்ல, தங்களுக்கு பதவி பெறுவது தான் லட்சியம். அதுவும் ஒரு பதவிபோதாதாம். பஞ்சாயத்துத் தலைவர் பதவி முதல் ஜனாதிபதி பதவி வரை எல்லா பதவிகளையும் தந்தாலும்அவர்களுக்குப் போதாது.
கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு பாடம் கற்பித்தனர். ஆனால், அதிலிருந்து அவர்கள் பாடம்கற்கவில்லை. அப்படிக் கற்றுக் கொள்ளும் வழக்கம் இல்லை என்பது தான் அவர்களது கடந்த கால சரித்திரம்.
இடைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இதனால் ஆத்திரத்தின் விளிம்புக்கே போய்விட்டார்கள்.அவர்களின் ஆத்திரத்தில் இருந்து தேர்தல் கமிஷன் கூட தப்பவில்லை.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார் அண்ணா. இவர்களிடம் உள்ளதெல்லாம் எதையுமே தாங்காதஇதயம் தான். இதற்குக் காரணம் அளவுக்கு மிஞ்சிய பதவி ஆசை.
பதவி என்று ஒன்று இருந்தால் அது தனக்கு வேண்டும் இல்லாவிட்டால் தனது குடும்பத்தினருக்கு வேண்டும். இதுதான் இந்த பதவி பகாசுரர்களின் அரசியல் சித்தாந்தம்.
இவர்களது ஓயாத புலம்பல்களுக்கு மத்தியில் தான் இந்த அரசு சாதனை மேல் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது என்றார் ஜெயலலிதா.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications