ஜனாதிபதி பதவி: லட்சுமி செகல் மனு தாக்கல் செய்தார்
டெல்லி:
கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ள கேப்டன் லட்சுமி செகல் இன்று காலைவேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அப்போது இந்திய கம்யூனிடஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதசார்பற்ற ஜனதா தளம், பார்வர்ட் பிளாக்,ஆர்.எஸ்.பி. ஆகிய கட்சிகளின் தலைவர்கள் உடனிருந்தனர். இவருக்கு முன்னாள் பிரதமர் சந்திர சேகரும் ஆதரவுதெரிவித்துள்ளார்.
வேட்பு மனுவை முன்னாள் பிரதமர் தேவ கெளடா முன்மொழிந்தார். அதே போல கேரள, மேற்கு வங்ககம்யூனிஸ்ட் கட்சியினரும் லட்சுமிக்காக இன்னொரு வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
அடுத்த மாதம் 15ம் தேதி நடக்கவுள்ள தேர்தலில் அப்துல் கலாமின் வெற்றி உறுதியாகிவிட்டது. ஆனாலும், தேசியஜனநாயகக் கூட்டணிக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் கேப்டன் லட்சுமி செகலைநிறுத்தியுள்ளன.
தமிழில் பேட்டியளித்த செகல்:
வேட்பு மனுவை த்தாக்கல் செய்த பின்னர் அவரை தமிழத்தைச் சேர்ந்த நிருபர்கள் சந்தித்தபோது தமிழில் பேசினார்லட்சுமி செகல். அவர் கூறுகையில், இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய கமிட்டியில் இருந்தவர் என் தாயார்.அந்த அரசியல் சட்டத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு நாம் ஒவ்வொருவருக்கும் உண்டு. நான் ஜனாதிபதியானால்அரசியல் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றார்.
இளம் வயதில் நேதாஜியின் ராணுவத்தில் பங்கேற்று ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வீரப் பெண்மணிகேப்டன் லட்சுமி. இவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான். சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டம்பெற்றவர்.
இப்போது புனேவில் தங்கியிருந்து ஏழை, எளியவர்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வருகிறார்.
வேட்பு மனுத் தாக்கல் வரும் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. 26ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது.அடுத்த மாதம் 15ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications